ஒரே குழப்பம்.. பின்வாங்கிய ஆளுநர் ரவி! ஏஜியிடம் கூட கேட்கவில்லை.. "யார்" அந்த ஐடியாவை கொடுத்தது?
சென்னை: அமைச்சர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லாமலே ஆளுநர் ஆர். என் ரவி செந்தில் பாலாஜியை நேற்று நீக்குவதாக அறிவித்தார். அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கியது யார் என்ற விவாதம்தான் தற்போது எழுந்துள்ளது.
அமலாக்கத்துறை வழக்கிற்கு இடையே நேற்று இரவு திடீரென செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று அறிவித்தார். செந்தில் பாலாஜி பதவியில் தொடர கூடாது. அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தால் அவர் மீதான விசாரணை சரியாக நடக்காது.
அவரின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது. அதனால் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.

ஆனாலூம் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
பின்வாங்கினார்: இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .
ஆலோசிக்கவில்லை: நேற்று நடந்த இந்த சம்பவங்கள் மூலம் ஆளுநர் ஆர். என் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அதாவது அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அவரிடம் பேசாமலே ஆளுநர் ஆர். என் ரவி முடிவெடுத்துவிட்டார் என்பது தெளிவாகிறது.
பொதுவாக இது போன்ற பெரிய விஷயங்களில் முடிவு எடுக்க ஆளுநர் ரவி தலைமை செயலாளரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை செய்ய வேண்டும். அது இரண்டையும் ஆளுநர் செய்யவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அமைச்சர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லாமலே ஆளுநர் ஆர். என் ரவி செந்தில் பாலாஜியை நேற்று நீக்குவதாக அறிவித்தார்.
இதனால் அவருக்கு இந்த ஆலோசனையை வழங்கியது யார் என்ற விவாதம்தான் தற்போது எழுந்துள்ளது. ஏற்கனவே பல வழக்குகளில்.. ஆளுநர்களுக்கு எதிராக உயர், உச்ச நீதிமன்றம் இதில் கண்டிப்பான கருத்தை கூறி உள்ளது. அமைச்சரவையை தன்னிச்சையாக மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லவே இல்லை என்று அறிவித்துள்ளது. முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிப்பார் என்றும், பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தைப் பற்றி பேசக்கூடாது என்றும் பிரிவு 164 கூறுகிறது. அதை ஆளுநர் மீற முடியாது. இதனால் சட்டம் தெரியாமலே அவருக்கு யாாவது இந்த ஆலோசனையை வழங்கினார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications