தலையே சுத்திடுச்சு.. புட்டு புட்டு வைத்த சோனியா.. குப்புனு வியர்த்து நின்ற "கதர் லீடர்ஸ்".. இதெப்படி
சென்னை: மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.. இதுகுறித்த முக்கியமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
5 வருடங்கள் கழித்து, திமுகவின் மகளிர் மாநாட்டுக்காக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும், கட்சியின் பொது செயலாளருமான பிரியங்கா காந்தியும், சென்னை வந்திருந்தனர்.

பிரியங்கா காந்தி: முன்னதாக, நேற்று பிற்பகல், சோனியாவும், பிரியங்காவும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கிண்டி நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது, சோனியா காந்தியிடம் நிர்வாகிகள் சில முக்கியமான விஷயங்களை முன்வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் கட்டுப்பட வேண்டும், உட்கட்சி பூசலுக்கு இடம் அளிக்காமல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறார்.
லிஸ்ட் மேல லிஸ்ட்: அதுமட்டுமல்ல, "தமிழக காங்கிரஸ் கட்சியின் இப்போதைய தலைவரை மாற்ற வேண்டும், 5 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதால் மாற்ற வேண்டும், தமிழக காங்கிரஸ் புதிய மேலிட பொறுப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், தேர்தலில் போட்டியிட மீண்டும் மீண்டும் ஒரே நபருக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது, அதிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது" என்றெல்லாம் சோனியா காந்தியிடம், கார்த்தி சிதம்பரம் உள்பட தமிழக கட்சி நிர்வாகிகள் முன்வைத்ததாக தெரிகிறது. அதேபோல, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பெண் தலைவரை நியமிக்க வேண்டும் என்று மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளும் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்தன.
கூடுதல் சீட்டுகள்: இந்நிலையில், இதுகுறித்து கூடுதல் தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன.. அதாவது, இந்த முறை கூடுதல் சீட்டுகளை திமுகவிடம் கேட்டு பெற வேண்டும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக பிரியங்காவை நியமிக்க வேண்டும் என்பது உட்பட நிறைய விஷயங்களை காங்கிரஸ் நிர்வாகிகள், சோனியா காந்தியிடம் சொன்னார்களாம்.

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்ட சோனியா, "கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் யாருமே உழைக்கவில்லை. எனக்கு வரும் தகவல்கள் திருப்திக்கரமாக இல்லை. பிரதான கட்சிகள் நம்மை மதிக்கும் வகையிலும் பயப்படுகிற வகையிலும் நாம் வளர்ந்திருக்க வேண்டும். அப்படி கட்சியை வளர்த்திருக்கிறீர்களா? தமிழகத்தில் 8 எம்.பி.க்கள் நம்மிடம் இருக்கிறீர்கள்...
இந்த 8 எம்.பிக்கள் என்பது பெரிய எண்ணிக்கைத்தான். அந்த 8 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டால் கூட நாம் ஜெயிக்கிற அளவுக்கு காங்கிரஸை வளர்த்திருக்க வேண்டும். செய்திருக்கிறீர்களா? இல்லையே...
திணறல்: 5 ஆண்டுகள் எம்பியாக இருந்து என்ன செய்தீர்கள்? நீங்கள் வெற்றிபெற்ற தொகுதியிலேயே பூத் கமிட்டி அமைப்பதில் திணறுகிறீர்களே? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டு திணறடித்துவிட்டாராம் சோனியா. இதில் எதற்குமே சரியாக பதில் சொல்ல முடியாமல், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு குப்பென வேர்த்துவிட்டதாம்..!!
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்?












Click it and Unblock the Notifications