எடப்பாடி எதிர்பார்க்காத ரூட்டில் செக் வைக்கும் எஸ்பி வேலுமணி? பரபரப்பில் அதிமுக நிர்வாகிகள்
சென்னை: அதிமுகவில் மீண்டும் உட்கட்சி யுத்தம் வெடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்புக்கும் இடையே கட்சியில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கட்சியை கைப்பற்ற இரு தரப்பும் காய் நகர்த்தி வரும் நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் முனைப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. 47 இடங்களில் மட்டுமே வென்ற அந்தக் கட்சி 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் கலகக்குரல்கள் எழுந்துள்ளன. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் அதிமுக பிளவுபட்டு இருக்கிறது.

25 பேர் தவெகவுக்கு ஆதரவு
அதில் விஜய்யின் தவெக அரசுக்கு சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி அணியினர் 22 பேர் எதிராகவும், வேலுமணி தரப்பில் 25 பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பினர், கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி தவெக ஆதரவு அளித்ததாக, வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 பேர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் மற்றும் சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர்.
எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கும் வேலுமணி தரப்பு
அதேபோல் வேலுமணி தரப்பினர், கொறடா விஜயபாஸ்கரின் உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இந்த 2 தரப்பு மனுக்கள் மீதும் சட்டப்படி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியுள்ளார்.
இன்னொரு பக்கம், வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆதரவு நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். ஆனால், "கட்சியில் பிளவு நிலவி வரும் நிலையில் எங்களை நீக்கியது செல்லாது" என்று வேலுமணி தரப்பினர் கூறுகின்றனர். இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று எஸ்பி வேலுமணி தரப்பு எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
பொதுக்குழுவை கூட்ட கையெழுத்து
பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப எஸ்பி வேலுமணி தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 5 ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று அதிமுகவின் பைலாவில் கூறப்பட்டு இருப்பதாகவும், இதனால் சுமார் ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற எஸ்பி வேலுமணி தரப்பு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிகிறது.
இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பு கேட்டால் பொதுக்குழுவை கூட்ட ஆதரவாக கையெழுத்து போட வேண்டாம் எனக் கூறியிருந்தார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - எஸ்பி வேலுமணி இடையே நாளுக்கு நாள் மோதல் வலுத்து வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
-
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications