Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இடிந்து" போன வைகோ.. "செத்தாலும் நோ உதயசூரியன்".. ஸ்டாலினின் அந்த வார்த்தை.. திருச்சியில் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி மதிமுகவில் ஒருவித தொய்வு காணப்பட்ட நிலையில், திடீரென களப்பணியில் வேகம் தென்படுகிறது.. 2 நாளில் என்ன நடந்தது? இதுகுறித்த ஒரு ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். ஆனால், இந்த முறை, சின்னம் தொடர்பான பிரச்சனையை வைகோவே எதிர்பார்க்கவில்லையாம்.

Did Tamil Nadu CM MK Stalin say to Vaiko about Durai and What is happening between Trichy DMK AIADMK

சின்னம் ஒதுக்கீடு: ஒருவழியாக மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்திற்கு பதிலாக, தீப்பெட்டி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து தீப்பெட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்த துரை வைகோ செய்தியாளர்களிடம் சொன்னதாவது:

இந்த தீப்பெட்டி சின்னம் எளிதில் மக்களிடம் சென்றடையும் சின்னம்... ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சின்னம், எளிய மக்கள் எல்லாருமே பயன்படுத்தும் விதமாக தீப்பெட்டி இருப்பதால்தான், அந்த சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த சின்னம் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக போராடி வந்தோம். பம்பரம் சின்னம் கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷமாகியிருப்போம்.. அடுத்தாக நாங்கள் எதிர்பார்த்த சின்னம் தீப்பெட்டி தான். இந்த சின்னம் கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்றார்.

தீப்பெட்டி: துரை வைகோவின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம், தீப்பெட்டி சின்னம் கிடைத்ததைவிட, உதயசூரியம் சின்னத்திலிருந்து போட்டியிடாமல் தப்பியதுதானாம்.. அதேபோல, இந்த சின்னம் சமாச்சாரம்தான், வைகோவை கலங்கும்படி செய்துவிட்டது.. அதுமட்டுமல்ல, மனம் கலங்கிய வைகோவை ஆறுதல்படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் என்பதுதான் திமுகவில் பரபரப்பு பேச்சாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏன் ? எதற்கு ? எப்படி ? என அறிவாலயத்தரப்பில் நாம் விசாரித்தபோது, இதுகுறித்த கூடுதல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

துரை வைகோ: அதாவது, " துரை வைகோவை வெற்றிபெற வைக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் ஆகியோரிடம் கொடுத்திருந்தார் ஸ்டாலின். இதனால், துரை வைகோ கெத்தாக இருந்து வந்தார்.

சமீபத்தில் நடந்த வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில், "செத்தாலும் இனி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டேன்" என ஆவேசப்பட்டு பேசியிருந்தார் துரைவைகோ.. உணர்ச்சி வேகத்தில் அவர் அவ்வாறு பேசியிருந்தாலும், இதனை உடன்பிறப்புகள் ரசிக்கவில்லை.

சின்னம்: கூட்டம் முடிந்ததும் நேருவிடமும் மகேஷிடமும், "துரைக்கு எங்களால் வேலை செய்ய முடியாது. நம்முடைய சின்னத்தை அசிங்கப்படுத்துவார். அதைக் கேட்டுக்கிட்டு மழுங்கிப்போய் வேலை பார்க்கணுமா? என்று உடன்பிறப்புகள் கொந்தளித்தார்களாம். உடன்பிறப்புகளின் கோபத்தில் நியாயம் இருந்ததால் அமைச்சர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இதனையடுத்து, துரை வைகோவுக்கு எதிராக ஒத்துழையாமையை மேற்கொண்டார்கள் உடன்பிறப்புகள்.

இதை துரை வைகோ கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. சுணங்கிப் போனார் துரை. அதேசமயம், துரையின் பேச்சு ஸ்டாலினுக்கும் வைகோவுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. துரையின் பேச்சை ஸ்டாலினும் ரசிக்கவில்லையாம். வைகோவோ, தன்னுடைய மகனை தொடர்புகொண்டு செம டோஸ் கொடுத்திருக்கிறார்.

சின்னப்பையன்: இந்த நிலையில், ஸ்டாலினை தொடர்பு கொண்ட வைகோ, 'சின்னப்பையன், ஏதோ தெரியாமல் பேசிவிட்டான். அவனை மன்னியுங்கள் தளபதி. நீங்கள் தான் பெரிய மனசு வெச்சு அவனை ஜெயிக்க வைக்க வேண்டும். அவன் ஜெயிக்கலைன்னா எனக்கு நிம்மதி இருக்காது" என்று மனம் கலங்கி பேசியிருக்கிறார் வைகோ.

அதற்கு ஸ்டாலின், "துரைக்கு அட்வைஸ் செய்யுங்கள்" என்று வைகோவிடம் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த நினைத்திருந்த நிலையில், மனம் கலங்கி வைகோ பேசியதில், ஸ்டாலினின் மனம் இளகிவிட்டது. உடனே வைகோவை ஆறுதல்படுத்திய ஸ்டாலின், "நீங்க நிம்மதியா இருங்க . துரையை ஜெயிக்க வைப்பது என் பொறுப்பு" என தெம்பூட்டியுள்ளார்.

கே.என்.நேரு: இதனையடுத்து, துரை ஜெயித்தாக வேண்டும் என நேருவிடமும் மகேஷிடமும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார் ஸ்டாலின். எனவே, கடந்த 2 நாட்களாக, களப்பணியில் இறங்காமல் இருந்த உடன்பிறப்புகள், துரையை மன்னித்துவிட்டு மறுபடியும் சுறுசுறுப்பாக வேலை பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள் திமுக மேலிட தொடர்பாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+