காங். கூட்டணி ஆட்சியை ஒப்பிட்டால்.. 10 ஆண்டு பாஜக ஆட்சியில் மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதல் குறைவு
சென்னை; 2004-2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டதை விட குறைவாகவே கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சியில் மீனவர்கள் கைதாகி உள்ளனர்.
2014ல் ஆட்சிக்கு வரும் முன் 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் தமிழக மீனவர்கள் கைதாகும் பிரச்சனை உச்சத்தில் இருந்தது. முக்கியமாக கச்சத்தீவு பக்கம் செல்லும் மீனவர்கள் எல்லை தாண்ட வில்லை என்றாலும் கூட கைது செய்யப்படும், தாக்கப்படுவதும், ஏன் கொலை செய்யப்படுவதும் கூட நடந்தது.

காங்கிரஸ் ஆட்சி மீது அப்போது கடுமையாக விமர்சனம் வைக்க இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அப்போது 2014 லோக்சபா தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்த மோடி கூட மீனவர்கள் பிரச்சனையை மையமாகவே வைத்தே பிரச்சாரம் மேற்கொண்டார்.
தான் பிரதமர் ஆனால்.. மீனவர்கள் பிரச்சனை தீர்ந்துவிடும். தமிழ் மீனவர்கள் மீது ஒருவர் கைவைக்க முடியாது என்றும் கூட மோடி பிரச்சாரங்களில் பேசி இருந்தார். சரி காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை மீனவர்கள் வருடா வருடம் கைது செய்யப்பட்டனர், அதன்பின் பாஜக ஆட்சியில் மீனவர்கள் எந்த அளவிற்கு கைது செய்யப்பட்டனர் என்ற புள்ளி விவரத்தை இங்கே பார்க்கலாம்.
காங்கிரஸ் ஆட்சியில் கைதான விவரம்:
2009 296 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 296 பேர் விடுவிக்கப்பட்டனர்
2010 196 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 196 பேர் விடுவிக்கப்பட்டனர்
2011 198 மீனவர்கள் கைது 198 விடுதலை
2012 197 மீனவர்கள் கைது 197 விடுதலை
2013 676 மீனவர்கள் கைது செய்யப்பட்ட 676 பேர் விடுவிக்கப்பட்டனர்
2014 787 மீனவர்கள் கைது 787 விடுதலை செய்யப்பட்டனர்.
காங்கிரஸ் காலத்தில் இலங்கை ராணுவத்தால் அதிக அளவில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை இந்த தரவு விளக்குகிறது. அதிலும் காங்கிரஸ் தலைமையின் UPA அரசாங்கத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக ஆட்சியில் கைதான விவரம்:
2015 454 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 454 பேர் விடுவிக்கப்பட்டனர்
2016 290 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 290 பேர் விடுவிக்கப்பட்டனர்
2017 453 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 453 பேர் விடுவிக்கப்பட்டனர்
2018 156 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 156 பேர் விடுவிக்கப்பட்டனர்
பாஜகவின் NDA ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, ஆண்டுதோறும் கைது செய்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 150க்கும் கீழே சென்றது..
2019 210 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 209 பேர் விடுவிக்கப்பட்டனர்
2020 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 74 பேர் விடுவிக்கப்பட்டனர்
2020 ஆம் ஆண்டில், கைது 100 க்கும் குறைவானதை எட்டியது.
2021 143 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 143 பேர் விடுவிக்கப்பட்டனர்
2022 219 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 218 பேர் விடுவிக்கப்பட்டனர்
2023 240 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் 240 பேர் விடுவிக்கப்பட்டனர்
2024 (இதுவரை பிப்ரவரி) 70 பேர் கைது செய்யப்பட்டனர், 60 பேர் விடுவிக்கப்பட்டனர்
காங்கிரஸ் ஆட்சியில் அதிகம்: ஒப்பீட்டளவில், 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 7,350 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர், அதேசமயம், பாஜக ஆட்சியின் கடைசி பத்தாண்டுகளில், 4,347 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர்.
மீனவர்கள்: 1991 முதல் 2014 வரையில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 169 சம்பவங்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் ஆட்சி செய்த 2000- 2014 வரை இந்திய பெருங்கக்கடலில் நடந்த இந்தச் சம்பவங்களில் 85 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டு 210 பேர் காயமடைந்துள்ளனர்.
அதுவே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, 2021 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் காணாமல் போனதாகவும், நான்கு நாட்களுக்குப் பிறகு பாக் ஜலசந்தியில் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
2017-ம் ஆண்டு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக புகார் வைக்கப்பட்டது. மார்ச் 2017 இல், இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
2013 மற்றும் 2016 க்கு இடையில் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.
ரிலீஸ் செய்யப்பட்ட மீனவர்கள்: 2011-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த எமர்சன், பி அகஸ்டஸ், ஆர்.வில்சன், கே.பிரசாத், ஜே.லாங்லெட் ஆகிய 5 மீனவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
5 மீனவர்களுக்கும் 2014 அக்டோபரில் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
2014 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்தது. பிரதமர் மோடி அப்போதைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தனது கவலையை எடுத்துரைத்தார். இதையடுத்து மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். . இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாக இது பார்க்கப்பட்டது.
கைதான இலங்கை மீனவர்கள்: பாஜக ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகளில், இந்தியா 70 முறை இலங்கை மீனவர்களை கைது செய்தது. மொத்தமாக 549 இலங்கை மீனவர்களை கைது செய்தது. அதன்பின் அவர்களை விடுவித்தது. ஆனால் அவர்களின் சொத்துக்களை (படகுகள்) தக்க வைத்துக் கொண்டது. தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், 45 முறை இலங்கை மீனவர்கள் இந்திய அரசால் கைது செய்யப்பட்டனர். இதில் 445 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வலிமையான நடவடிக்கை: மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவிற்கு கொடுக்கப்பட்டது. இந்த துறைமுகம் 2010 இல் நிறுவப்பட்டது. கொழும்புக்குப் பிறகு இலங்கையின் இரண்டாவது பெரிய துறைமுகமாக மாறியது. இது சீனாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றது காங்கிரஸ் ஆட்சியின் தோல்வியாக பார்க்கப்பட்டது.
அதே சமயம் கடந்த வருடம், எந்தவொரு சீன ஆராய்ச்சிக் கப்பலையும் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தவோ அல்லது அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) ஒரு வருடத்திற்கு செயல்படவோ அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை ஒப்புக்கொண்டது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைக்கு முக்கிய எடுத்துக்காட்டாக இந்த நடவடிக்கை அமைந்தது குறிப்பிடத்தக்கது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
ஶ்ரீபெரும்புதூரை குறிவைத்த விசிக.. தொகுதி மாறும் செல்வப்பெருந்தகை.. எங்கு தெரியுமா -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர











Click it and Unblock the Notifications