Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வன்மம் மேக்ஸ்.. சிவகார்த்திகேயன் பராசக்தியை சீண்டும் விஜய்? வள்ளுவர் கோட்டத்தை தாக்கியது ஏன்?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் வள்ளுவர் கோட்டம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய் மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கி பேசி இருக்கிறாரோ.. அவரின் பராசக்தி படத்தை விமர்சனம் செய்து பேசி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்க்னும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவ்சாயத்திற்கு பெயர்போன மண்.

எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.

Did Tamilaga Vetri Kazhagam Vijay attack on Sivakarthikeyan Parasakthi

காலிங்கராயன் இங்கே கட்டிய அணையை மறக்க முடியுமா? அந்த காலத்து ஹீரோ அவர்.. அவர் இங்கே எப்படி அணை கட்டினார் தெரியுமா? இங்கே பாம்பு ஒன்று போனதாம்.. அந்த கதையை சொல்கிறேன் கேளுங்கள்.. அந்த பாம்பு சென்ற திசையில் எல்லாம் இவர் நதியின் பாதையை நிர்ணயித்து.. அணையை கட்டினார்.. அப்படி ஹீரோக்கள் வாழ்ந்த மண் இது.

ஆனால் இப்போது இதே மண் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரிவு செய்யப்படாமல் வறட்சியில் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவு செய்ய சொன்னால் இவர்கள் அதை செய்யாமல்.. கண்காட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், என்று விஜய் பேசினார்.

விஜய் பேச்சால் சர்ச்சை

வள்ளுவர் கோட்டம், கண்காட்சி என்று கூறியதன் மூலம் விஜய் மறைமுகமாக சிவகார்த்திகேயனை தாக்கி பேசி இருக்கிறாரோ.. அவரின் பராசக்தி படத்தை விமர்சனம் செய்து பேசி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக தரப்பு ஐடிக்கள், திமுக ஆதரவு ஐடிக்கள் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். மில்டன் அரசியல் விமர்சகர் வைத்துள்ள விமர்சனத்தில், வள்ளுவர் கோட்டத்தை மேம்படுத்துவது சங்கிகளுக்கு தானே எரிச்சலை தர வேண்டும் இவருக்கு ஏன் எரிகிறது? என தேடினால்.... இந்தி எதிர்ப்பு களத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் பராசக்தி படத்தின் கண்காட்சி இன்று வள்ளுவர் கோட்டத்தில் தொடங்குகிறது... சினிமாவுல தனக்கு Clash போட்ட சிவகார்த்திகேயனுக்கு எதிரா அரசியல் மேடைல அழுகும் அல்ப்பைதான் இந்த விஜய்...! என்று விமர்சனம் வைத்துள்ளனர்.

அதே சமயம் திமுகவின் அறிவுத்திருவிழா சார்பாக இதே வள்ளுவர் கோட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. அந்த கண்காட்சி பெரிய அளவில் கவனம் பெற்றது. இதைத்தான் விஜய் விமர்சனம் செய்துள்ளார். அவர் பராசக்தி படத்தை விமர்சனம் செய்யவில்லை என்று பதில்கள் அளிக்கப்படுகின்றன.

விஜய் சொன்னது என்ன?

இன்று விஜய் தனது பேச்சில், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம். நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை..என கத்திகிட்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க சார்..

தயவு செய்து பெரியார் பெயரை மட்டும் சொல்லி கொள்ளையடிக்காதீங்க, களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவுங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்க போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறையா வேலை இருக்கு.. என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+