தமிழருவி மணியன் வந்துட்டாரு.. அண்ணாமலை கிட்ட போனதுமே.. கதிகலங்கும் அதிமுக.. அலர்ட் திமுக.. பலே பாஜக
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் திடீரென சந்தித்துப் பேசியிருக்கிறார்.. என்ன காரணம்?
தமிழருவி மணியன் என்றாலே அதற்கு மறு உருவமாக கண்ணில் வந்து நின்றுவிடுகிறார் ரஜினிகாந்த்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே அதுவரை அரசியல் ஆலோசகராக இருந்து வந்த மூத்த தலைவர் சோ, மெல்ல மெல்ல ரஜினிக்கும் ஆலோசகராக மாறிய காலம் ஒன்று உண்டு..

ரஜினிகாந்த்: ஆனால், சூழ்நிலை, உடல்நிலை, போன்ற காரணங்களால் சோ மெல்ல ஒதுங்க நேர்ந்துவிட, ரஜினிக்கு ஆலோசனை தர யாருமில்லாமல் தனித்து விடப்பட்டார்... அந்த இடத்தைதான் லபக்கென்று பிடித்து கொண்டார் தமிழருவி மணியன். காந்தியவாதியான தமிழருவி மணியனின் ஒவ்வொரு பேச்சும், நோக்கமும் ரஜினியையே சுற்று சுற்றி வர துவங்கியது.
ஒருமுறை தமிழருவி மணியன்பேசும்போது, "இந்த மண் முழுவதையும் அன்பால் ஆர தழுவி அரவணைத்து கொள்ள வேண்டும் எனத் துடித்து தவமிருக்கும் மனிதன்தான் ரஜினிகாந்த். காந்தியவாதி ரஜினி உண்மையாக இருப்பதும், அன்பாக இருப்பதும்தான் காந்தியம் என்றால், ரஜினிகாந்த்தான் உண்மையான காந்தியவாதி" என்று புகழாரம் சூட்டியிருந்தார். அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த்தைவிட, அதிகமாக பேசியது தமிழருவி மணியனாகத்தான் இருக்க முடியும்.
தீவிர அரசியல்: தீவிர அரசியலுக்கு ரஜினியை எப்படியாவது கொண்டுவந்துவிட வேண்டும் என்று பாஜக மறைமுகமாக முயற்சிக்க, இந்த முயற்சியில் தமிழருவி மணியன் நேரடியாக ஈடுபட... கடைசியில் எதுவுமே நடக்காமல் போய்விட்டது. அதற்கு பிறகு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட தமிழருவி மணியன், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான அரசியலை, தன்னுடைய காமராஜர் மக்கள் கட்சி மூலம் முன்னெடுத்து வருகிறார்..
இந்நிலையில், மீண்டும் தமிழருவி மணியனின் அதிரடி கிளம்பி உள்ளது.. நேற்றைய தினம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, நேற்று திடீரென சந்தித்து பேசியிருக்கிறார்.. இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை, ட்வீட் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார்.
ட்வீட்: "கர்மவீரர் காமராஜரால் 'தமிழருவி' பட்டத்தை வழங்கப் பெற்றவர், தனது வசீகரிக்கும் தமிழாலும், கம்பீர சொற்பொழிவுகளாலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி, தமிழக அரசியலின் முன்னோடி, எளிமையின் இலக்கணமாக விளங்குபவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வறியாமல் மக்கள் பணிகளை ஆற்றி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அய்யா திரு தமிழருவி மணியன் அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தலைவர்கள் சந்திப்பு என்பது இயல்பான விஷயம் என்றாலும், அதிமுக - பாஜக கூட்டணி பிளவில் உள்ள நேரத்தில், எதற்காக இந்த சந்திப்பு என்று தமிழக அரசியல் களமே பரபரத்துவிட்டது. எனினம், இதுகுறித்து சில தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.
என்ன காரணம்: கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்ட நிலையில், அதிமுகவுடன் இதுவரை யாருமே கூட்டணி வைக்கவில்லை.. ஜிகே வாசன், ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏசி சண்முகம் உள்ளிட்ட பலரும் ஆதரவாக இருக்கிறார்களே தவிர, கூட்டணியில் உறுதியாக இணைவதாக சொல்லவில்லை.. அதேசமயம், பாஜக பக்கமும் இவர்கள் யாருமே சாயவுமில்லை..
பூவை ஜெகனின் புரட்சி பாரதம், தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சியும் எடப்பாடிக்கு ஆதரவை தெரிவித்துள்ளதுபோல, ஐஜேகே பாரிவேந்தர் மட்டும் பகிரங்கமாக தன்னுடைய நிலைப்பாட்டை பாஜகவுக்கு அறிவித்திருக்கிறார்... மற்றபடி வேறு யாருமே கூட்டணியை உறுதி செய்யவில்லை. இந்த வாய்ப்பை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பாஜக முயன்று வருவதாக தெரிகிறது
திமுக காங்கிரஸ்: இப்படிப்பட்ட சூழலில், தனக்கு நெருக்கமாக உள்ள சிறு கட்சிகளை பாஜகவில் இணைக்கும் முயற்சியில் தமிழருவி மணியன் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. சுருக்கமாக சொல்லப்போனால், பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியிலும், திமுக கூட்டணிக்கு செக் வைக்கும் முயற்சிலும் தமிழருவி மணியன் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications