"பணிந்தது" பாஜக.. அதிமுகவிடம் சரண்.. இதுக்கு பருத்தி மூட்டை கொடோன்லயே இருந்திருக்கலாமே!
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்று கொண்டுவிட்டதா?
சென்னை: முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜகவின் சிடி ரவி தெரிவித்துள்ளார்.. இதையடுத்து தங்கள் முடிவில் இருந்து பாஜக பின்வாங்கியதாகவே கருதப்படுகிறது.
Recommended Video

கிட்டத்தட்ட 3 மாதமாகவே அதிமுகவை கதிகலங்க வைத்துவருகிறது தமிழக பாஜக.. முதல்வர் வேட்பாளரை கூட்டணி தலைமைதான் அறிவிக்கும் என்று சொல்லி கொண்டே இருந்தது.
எல்.முருகன் இதையேதான் சொன்னார்.. வானதியும் இதையேதான் சொன்னார்.. இவர்கள் அமைதியாக இருந்தால், அண்ணாமலையும், குஷ்புவும் தங்கள் பேட்டிகளில் மறக்காமல் சொல்லி கொண்டே இருந்தனர்.

வேட்பாளர்
இது பல்வேறு விவாதங்களையும், வாதங்களையும் சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தியது.. இதற்கு முன்பு முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் யாருமே இப்படி சொன்னது இல்லை.. பாஜக சொன்னதை பார்த்து, பாமகவும் பிரச்சனையை கிளப்புகிறது என்றாலும், பாஜக ஏன் அதிமுகவுக்கு அப்படி ஒரு அழுத்தத்தை தந்தது என்பதும் கேள்வியே!

பெரும்பான்மை
இன்று பாஜக பொறுப்பாளர் சிடி ரவி பேசும்போது, "அதிமுக பெரும்பான்மை கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அந்த கட்சியே தீர்மானிக்கும்... அதிமுக தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை பாஜக ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.. அதே சிடி ரவிதான் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது, கர்நாடகா, கோவை போல தமிழகத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி 2021-ல் அமையும் என்று சொல்லி இருந்தார்.

சாதுர்யம்
இப்போது தன்நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி உள்ளார்.. அதிமுக பெரும்பான்மை கட்சி என்பது கடந்த வாரம் சிடி ரவிக்கு தெரியாதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு தெரியாதா? என்றும் நமக்கு கேட்க தோன்றுகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் இந்த ஜகா வாங்கும் நடவடிக்கை? வாஜ்பாய், அத்வானி காலத்து பாஜக என்பது சித்தாந்த ரீதியில் இருந்தது.. ஆனால், இப்போதுள்ள பாஜக ஒருவித சாதுர்ய அரசியலில் நகர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சரியான உதாரணம்.

எத்தனை எம்பிக்கள்?
அதிமுகவை திணற வைக்கும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா? இதுவரை தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருந்திருக்கிறதா? அந்த கட்சிக்கு எத்தனை எம்எல்ஏ, எம்பி.க்கள் இருக்கிறார்கள்? குறைந்தபட்சம் வாக்கு சதவீதத்தை அதிமுகவை விட அதிகமாக வைத்திருக்கிறதா? இப்படி எதுவுமே இல்லாமல், ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட அதிமுகவை, பாஜக குழப்பியடித்தது ஏற்கவே முடியவில்லை என்றார்கள் சிலர்.

அடம்
ஒரு கூட்டணி கட்சி என்றால், தங்களுக்கு தொகுதிகளை அதிகமாக கேட்டு வாங்கி கொண்டு போகலாம்.. அல்லது இன்னின்ன தொகுதிகள் வேண்டும் என்று கேட்டு அடம்பிடிக்கலாம்.. அதைவிட்டுவிட்டு, முதல்வர் வேட்பாளராக கூட்டணி தலைமைதான் அறிவிக்கும் என்று சொல்லியிருக்க கூடாது என்றும் ஒருவித பயத்தை அதிமுகவுக்கு காட்டி குழப்பி இருக்கவும் கூடாது என்றும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை சொன்னார்கள். அதேபோல, தமிழக போல பாஜகவின் தொடர்ந்து அழுத்தமாக வைக்கப்பட்ட இந்த கோரிக்கைக்கு ஓபிஎஸ்ஸும் இவ்வளவு நாள் மவுனம் காத்து இருந்திருக்ககூடாது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறினார்கள்.

நட்டா வருகை
இப்போதுகூட சிடி ரவி, இப்படி சொல்கிறாரே தவிர, அதுவே நிலையான, உறுதியான முடிவா என்றுகூட தெரியவில்லை. ஏனென்றால், 2 நாளில் நட்டா இங்கு வரப்போகிறார்.. இதில் அவர் வேறு வந்து என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.. இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முதல்வர் வேட்பாளர் இவர்தான் என்று அறிவிக்கும்வரை, அதை அமித்ஷாவே சொல்லும்வரை இந்த பிரச்சனை ஓயாது என்றே கருதப்படுகிறது!












Click it and Unblock the Notifications