Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிட்நைட்டில்.. ரஜினிக்கு போனை போட்ட புள்ளி.. ஸாரி சொல்லிட்டாராமே.. கதிகலங்கும் ரெய்டு மேட்டர்.. ஏன்?

நடிகர் ரஜினிகாந்திடம் தயாரிப்பாளர் ஒருவர் உதவி கேட்டதற்கு, அதை செய்ய மறுத்து விட்டாராம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் ரெய்டுகள் காரணமாக, கோலிவுட் வட்டாரமே வெலவெலத்து போயுள்ள இந்நிலையில், முக்கிய தகவல் ஒன்று பரபரத்து வருகிறது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன்.. இவருக்கு 58 வயதாகிறது.. இவர் தமிழகத்தின் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து உள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகம் கோலோச்சுபவரும்கூட.. கடந்த 2020ம் ஆண்டு, திடீரென அன்புச்செழியன் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்..

அப்போது, கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய நிலையில், இந்த விவகாரம், அப்போது, தமிழ் திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் அன்புச்செழியன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்..

 கோலிவுட்

கோலிவுட்

இன்று 3வது நாளாக சோதனை நடந்து கொண்டிருக்கிறது.. இதுவரை நடந்த ரெய்டில், கணக்கில் காட்டப்படாத பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றியதாக தகவல் வெளியாகி வருகிறது.. அதேபோல, கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். ரெய்டுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி கோலிவுட்டை கடுமையாக தாக்கியது. இவரை தொடர்ந்து, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் வீடுகளிலும், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது, கோலிவுட்டையே கலங்கடிக்க செய்துள்ளது.

ரஜினி

ரஜினி

இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கிய தகவல் பரபரத்து வருகிறது.. அன்புச்செழியன், எஸ்.தாணு உள்ளிட்ட கோலிவுட் சினிமா தயாரிப்பாளர்களை குறி வைத்து ரெய்டுகள் நடத்திவரும் நிலையில், ஒரு தயாரிப்பாளர் ரொம்பவே மிரண்டு போயுள்ளாராம்.. இந்த ரெய்டின் விளைவு, தன்னை பாதித்துவிடாமல் இருப்பதற்காக நடிகர் ரஜினியிடம் உதவி கேட்டுள்ளார் அவர்.. 2-ந்தேதி இரவு, ரஜினிக்கு போனை போட்டும் பேசி, தனக்கு உதவி செய்யுமாறும் கேட்டுள்ளார். அதற்கு எடுத்த எடுப்பிலேயே ரஜினி மறுத்து விட்டாராம்.

 போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

"அப்படியானால், மத்திய அரசிடம் நேரடியாக பேசி, எனக்கு உதவி செய்யமுடியாவிட்டாலும், முக்கிய நபரின் தொடர்பை மட்டுமாவது, ஏற்படுத்திக் கொடுங்கள், நான் பேசிக்கிறேன்" என்று கேட்டிருக்கிறார்.. அதற்கும் ரஜினி, ஸாரி சொல்லிவிட்டாராம்.. மேலும், இது போன்ற விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை என்றும் சொல்லி உதவி செய்ய மறுத்துவிட்டாராம்... இரவு நேரம் என்றும் பாராமல் போனை போட்டு உதவி கேட்டவர், ரஜினிக்கு நீண்ட கால பழக்கம் என்கிறார்கள்.. ஆனாலும், ரஜினி இதில் தலையிடுவதை தவிர்த்ததாக சொல்கிறார்கள்.

Recommended Video

    வருமான வரித்துறை ரெய்டு...யார் இந்த அன்புச்செழியன்? *TamilNadu
    நெருடல்

    நெருடல்

    வருமான வரி விஷயத்தில் ரஜினிகாந்த் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது என்றாலும், சமீபத்தில்தான், தமிழகத்தில் அதிக வரி செலுத்தினார் என்று கூறி, ரஜினிக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.. அதேபோல, தனக்கு நெருடலாக உள்ள விவகாரங்களில், முக்கியமாக, முறைகேடான செயல்பாடுகளுக்கு ரஜினி என்றுமே துணை போவதில்லை என்பார்கள்.. அந்தவகையில்தான், தயாரிப்பாளரின் கேட்ட உதவியைகூட நாசூக்காக மறுத்துள்ளதாக தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+