Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குனிஞ்சிட்டு பேசணுமா.. ஏங்க, நானு திமுககாரனா? இதெல்லாம் அநாகரீகம்.. மீடியா மீது பாய்ந்த திருமாவளவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், செய்தியாளர்களிடம் கோபத்தில் சீறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.. என்ன நடந்தது இன்றைய செய்தியாளர் சந்திப்பில்?

வேங்கைவயல் விவகாரத்தை கண்டித்து அப்போதே விசிக கண்டனத்தை பதிவு செய்திருந்தது.. மனித மலம் கொட்டிய சாதி வெறியர்களை கைது செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தையே நடத்தியது..

அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம், பேசும்போது, "இந்த சம்பவம் நாட்டுக்கே அவமானமான செயல், ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லையே.. அதுதான் என்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

Did Thirumavalavan get angry with Media reporters and what did he say about dmk government

குற்றவாளி கைதாகலையே: மத்திய மாநில பட்டியலின ஆணையம் உள்ளது, இவை இதுவரை புதுகோட்டை பகுதிக்கு செல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது பிரச்சனை அல்ல, மனித குலத்திற்கே அவமானமான பிரச்சனை இது. இதில் மற்ற அரசியல் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தாது வருத்தத்தை அளிக்கிறது" என்று தன் ஆதங்கத்தை கொட்டியிருந்தார் திருமா.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போதும், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய காலம் தாழ்த்துவது சமூக நீதி அரசுக்கு அழகல்ல என்றார்.. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை, நேரடியாக அட்டாக் செய்து திருமாளவன் விமர்சித்திருப்பதாகவே இது பார்க்கப்பட்டது..

இந்நிலையில், இன்றைய தினம் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து, வேங்கைவயல் விவகாரம் குறித்து திருமாவளவன் பேசினார்.. அப்போது, "சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை.. திமுகவுக்கு ஆதரவாக விசிக செயல்படுகிறதா?" என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது..

Did Thirumavalavan get angry with Media reporters and what did he say about dmk government

திருமாவளவன்: அதற்கு திருமாவளவன்,"நாள் என்பதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.. இத்தனை நாள் ஆகும் என்று வழக்குகளில் உறுதியாக சொல்ல முடியாது. ராமஜெயம் படுகொலையில், இத்தனை வருஷம் ஆகியும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.. அதுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாக சிக்கல் இருக்கலாம்.. அல்லது விசாரணையில் உறுதிப்படுத்தப்படாத தகவல் இருக்கலாம். ஆனால், திமுக அரசு, தலித் மக்களுக்கு எதிராக இல்லை.. வேங்கைவயல் பிரச்சனையில், யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை..

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை .. ஆனால், அரசுக்கு தலித்துக்கு எதிராக செயல்பட வேண்டிய கட்டாயம் இல்லை.. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கட்டும்.. அதுல ஏதாவது அவசரம் இருக்கா? காலக்கெடு ஏதாவது இருக்கா? திமுகவை எதிர்த்து எங்களை மாதிரி போராட்டங்களை யாரும் நடத்தவில்லை.. தலித்துகள் பிரச்சனைகளுக்காக இந்த 2 ஆண்டுகளில் 10 போராட்டங்களை நடத்தி உள்ளோம்.. நாளைக்குகூட கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்த போகிறோம்..

Did Thirumavalavan get angry with Media reporters and what did he say about dmk government

நான் திமுகவா?: திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறதாலேயே இப்படி நீங்கள் அநாகரீகமாக பேசக்கூடாது.. எல்லாமே அரசு செய்யுங்க.. என்னங்க ஆவேசம்? திமுககாரனா நான்? இதெல்லாம் ரொம்ப அநாகரீகமான பேச்சு... அதிகாரிகளிடம் பேசிட்டு இருக்கோம்.. போராட்டம் நடத்திட்டு இருக்கோம்.. விசாரணை நடந்துட்டு இருக்கு.. புலனாய்வு போய்ட்டு இருக்கு.. நான் ஆவேசமா பேசறேன்னு சொல்றீங்க? இதுக்கு பெயர் ஆவேசமா? கையை நீட்டி பேச வேண்டாம் என்றால், நான் கையை கட்டிட்டு பேசனுமா? மீடியா முன்னாடி குனிஞ்சு பேசணுமா?" என்றார் திருமாவளவன்.

திமுகவை இப்போதுவரை விட்டுக்கொடுக்காமல் திருமாவளவன் பேசிவரும்நிலையில், இதைத்தான் 2 மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் சீமானும் கேள்வி எழுப்பியிருந்தார். வேங்கைவயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய சீமான், செய்தியாளர்களிடம் பேசினார்.. வேங்கைவயல் விவகாரத்தில், அரசியல் கட்சிகள் அவ்வளவாக எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்று திருமாவளவன் சொல்லியிருக்கிறாரே, என்று செய்தியாளர்கள், சீமானிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்..

அதற்கு சீமான், "அதை என் அண்ணன் திருமாவளவன் சொல்லக்கூடாது.. பிறகட்சிகளை குற்றம் சொல்ல இவருக்கு எந்த தகுதியுமில்லை.. ஓட்டு வங்கி அரசியலுக்காக திட்டமிட்டே தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.. இந்த சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது.. இதுவரையில் காவல்துறையும், சிபிசிஐடியும் ஏன் குற்றவாளிகளை கைது செய்யவில்லை? இந்த விவகாரத்தில் பிற கட்சிகளை குற்றம் சொல்ல திருமாவளவனுக்கு தார்மீக அடிப்படையில் தகுதியில்லை..

அவர் கூட்டணியில் இருக்கும் கட்சி முதல்வரிடம் ஏன் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை? முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து போராட்டம் நடத்துவாரா திருமாவளவன்? அல்லது நான் முன்னெடுத்த இதுபோன்ற பல பிரச்சனைகளுக்கு அவர் எங்களுடன் களத்தில் இதுவரை நின்றாரா? நான் மட்டும் முதலமைச்சராக இருந்திருந்தால், இந்நேரம் இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்து ஜெயிலில் அடைத்திருப்பேன்.. பெரியார் மண், சமூக நீதிக்கான மாநிலம் என்று கட்டமைத்திருப்பது எல்லும் இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலை என்று கொந்தளித்து சீமான் கூறியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+