ஆரம்பிச்சிட்டாங்க.. அரியலூர் பெருமாள் கோயிலில் நுழைந்த திருமாவளவன்.. உடனே வந்த பாஜக.. சலசல இணையம்
சென்னை: மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ரேசன் கடைகளே இருக்காது என்று ஒரே போடாக போட்டுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். இதனால், மீண்டும் எரிச்சலாகி உள்ளனர் பாஜகவினர்.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.. தமிழகத்திலும் அரசியல் கட்சிகளும் வாக்குகளை தீவிரமாக சேகரித்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், விசிக தலைவர் திருமாவளவனின் பிரச்சாரமும் அனலை கிளப்பி வருகிறது. இதில் அரியலூர் பிரச்சாரம் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

திருமா பேசும்போது, "மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் ரேசன் கடைகளே இருக்காது , 100 நாள் வேலை திட்டம் இருக்காது, சமூக நீதி இருக்காது, அதிபர் ஆட்சியே வந்துவிடும். ஏழை மக்கள் ரூ.50,000 கடன் வாங்கினால் வீட்டுக்கே வந்து வங்கி நிர்வாகம் வசூலிக்கும். ஆனால், மோடியின் நண்பர்களான அதானி, மல்லையா வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கினால் தள்ளுபடி செய்வார்கள்.
இந்தியா கூட்டணி: நரேந்திர மோடியே, முதல்வர் ஸ்டாலினின் அரசியல் எதிரி. இந்த வழக்கமான தேர்தல் கிடையாது.. சங்பரிவார் அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான போர். இதில் பொதுமக்களுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணி உள்ளது.
அதிமுக அணி வேறு, பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் ஒன்றாக இருந்தபோதே வெற்றி பெற முடியவில்லை. அதனால், பிரிந்து நின்று வெற்றி பெறமுடியாது என்று அவர்களுக்கே நன்றாகவே தெரியும். அதனால், இது அரசியல் நாடகம். அதிமுகவும், பாஜகவும் அரசியல் நாடகம் ஆடுகின்றனர்.
பாமக: வேளாண் மசோதா, சிஏஏ, இட ஒதுக்கீடுகள் அமலாக முக்கிய காரணமே அதிமுகவும், பாமகவும் தான். இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர், தான் என்று பேசியவர் மோடி. அந்த வகையில், சிறுபான்மையினருக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக இருக்கும் பாஜகவுடன் இணைந்துள்ளது பாமக. ஆனால், திமுக சமூக நீதியை பாதுகாக்கவே, காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - விசிகவுடனான கூட்டணியை, நெருக்கடிகள் வந்தாலும் பரவாயில்லை என தொடர்ந்து வருகிறது.
எம்பி தேர்தலில் கூட, அதிமுகவினர் பாஜகவை விமர்ச்சிக்க மாட்டார்கள். திமுகவைத்தான் விமர்சனம் செய்வார்கள். தேர்தலில் கூட பாஜகவை விமர்ச்சிக்காதவர்கள் தான் அதிமுகவினர் என்பதை மக்கள் உணர வேண்டும்.. சாதி, மதங்களை தூண்டிவிட்டு இப்படியே நீங்கள் கிடங்கள் என்று சொல்லும் கட்சி தான் பாஜக. அதிமுக வீழ்த்தப்பட வேண்டிய கட்சி, பாஜக விரட்டி அடிக்கப்பட வேண்டிய கட்சி" என்றார்.,
வழிபாடுகள்: பிரச்சாரம் முடித்துவிட்டு செல்லும்போது, அரியலூரில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் திருமாவளவன். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரும் அவருடன் வழிபாடு செய்தார்.
இந்து மதத்தை பற்றியும், இந்து கடவுள்கள் பற்றியும் அடிக்கடி அவதூறாக பேசும் திருமாவளவனை, திமுகவும் கண்டுக்கொள்வதில்லை.. தேர்தல் வந்ததுமே, கோயிலுக்குள் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்துகிறார் திருமாவளவன். தேர்தல் வந்துவிட்டாலே, திருமாவளவனுக்கு எங்கிருந்தோ இந்து கடவுள்களின் நினைவு வந்து விடுகிறது. உடனே கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்துவிடுகிறார்.
பெருமாள் கோயில்: ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு, தன்னுடைய சொந்த கிராமமான அங்கனூரில் உள்ள குல தெய்வமான மாயவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டுதான் வேட்புமனுத்தாக்கல் செய்ததாக சொன்னார்கள். இப்போது, அரியலூர் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளாரே? என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சிக்க துவங்கி உள்ளன.
பிரதமர் மோடியை திருமாவளவன் பிரச்சாரங்களில் விமர்சித்து வருவதால் பாஜகவினரும், திருமாவளவனை பாஜகவினர் விமர்சித்து வருவதால் சிறுத்தைகளும் மாறி மாறி கருத்துக்களை பதிவிட்டு வருவதால், சோஷியல் மீடியாவில் சலசலப்பும், பரபரபபும் கூடிவருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications