"3 அணி".. அண்ணே எடப்பாடி.. சசிகலா தலைமையில் அதிமுக?.. திருமாவளவன் சொன்னதுமே, சட்டுனு திரும்பிய பாஜக
திருமாவளவன், மீண்டும் அதிமுகவுக்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை தந்து அலர்ட் செய்திருக்கிறார்
சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இதை பாஜக உற்றுகவனித்து கொண்டிருக்கிறது.
திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போகிறதா? இல்லையா? என்ற இறுதியான முடிவு இதுவரை தெரியவில்லை.. ஆனால், திமுகவுடன் எங்கள் கூட்டணி வலுவாகவே இருக்கிறது என்று விசிக தொடர்ந்து சொல்லி வருகிறது.
திமுகவுடனானா கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போதெல்லாம், அதிமுக குறித்தும் பேசிவருகிறார்.. கடந்த ஒரு வருட காலமாகவே, அதிமுகவின் நிலைமையை பற்றியும் கவலையை வெளிப்படுத்தி வருகிறார்.

மகா கொம்பன்
குறிப்பாக, "திமுக - விசிக கூட்டணியை எந்த கொம்பனாலும் அசைத்துவிட முடியாது.. சிதைத்துவிட முடியாது.. ஏனென்றால், நாங்கள் கொள்கை சார்ந்து ஒன்றிணைந்த கூட்டணியாக இருக்கிறோம்.. தனிப்பட்ட பாஜகவுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. அது பேசும் அரசியலை எதிர்க்கிறோம்.. அதன் கொள்கையை எதிர்க்கிறோம்.. ஆனால், ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்கே எதிரி என்று எங்களை திசைதிருப்புகிறார்கள்.. பாமகவின் அணுகுமுறைகளை நாங்கள் விமர்சிக்கிறோம்.. அதற்காக நாங்கள் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை" என்று தெளிவுபடுத்தியிருந்தார் திருமாவளவன்.

கருணாநிதி
அதேசமயம், அதிமுகவுக்கும் அவ்வப்போது நல்ல விஷயங்களையும், அறிவுரைகளையும் சொல்லி வரும்நிலையில், பாஜகவிடம் கவனமாக இருக்கும்படியும் அதிமுகவை கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.. சமீபத்தில் ஒரு பிரபல சேனலுக்கு திருமாவளவன் ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "தமிழ்நாட்டில் கலைஞருக்கு எதிராக அன்று எம்ஜிஆர் இருந்தார்.. அடுத்து ஜெயலலிதா அம்மா இருந்தாங்க.. இப்படி இரு துருவ அரசியல் இங்கே நடந்தது.. இப்படி சொல்வதைவிட, திமுகவுக்கு எதிராக அதிமுக இருந்தது என்று சொல்வதே சரி.. திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளால், காங்கிரசும் பாஜகவும் இங்கே வளர முடியாமல் போனது.. ஒருவேளை அதிமுக என்ற கட்சி உருவாகாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் Vs திமுக என்றே இங்கே நீண்ட கால அரசியல் நடந்திருக்கும்.

எடப்பாடி பழனிசாமி
தேசிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால்தான், இன்னொரு தேசிய கட்சியான பாஜக வளர முடிந்தது.. 2 மாநில கட்சிகள் வலுவாக இருக்கும் இடத்தில், 2 தேசிய கட்சிகள் வர முடியாது... அண்ணன் எடப்பாடி பழனிசாமியை நான் நேரில் சந்தித்தால், அதிமுகவை வலிமைப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை கண்டிப்பாக நான் அவரிடம் கேட்பேன்.. ஜெயலலிதா எம்ஜிஆர்மாதிரி அக்கட்சியை ஒருவர் வழிநடத்தவேண்டும்.. நானே ஒரு அரசியல் கட்சி நடத்துவதால், இன்னொரு கட்சி நலன் பற்றி பேசக்கூடாது..

அண்ணன் எடப்பாடி
அதிமுக சிதறினால், அதனால் தங்களுக்கு நன்மை என்றே யாராக இருந்தாலும் நினைப்பார்கள்... அதிமுக பலவீனமாக வேண்டும், அதிமுக தொண்டர்கள் சிதறிபோய், தங்கள் கட்சியில் வந்து சேர வேண்டும், அதிமுக அழிந்து போக வேண்டும் என்றெல்லாம் பிற கட்சியினர் நினைப்பார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை.. காரணம், அதிமுக இடத்தில் பாஜக வந்து உட்கார்ந்து கைப்பற்ற நினைக்கிறது. அங்கே பாஜக வரக்கூடாது என்றால், அதிமுக வலுவாக இருக்க வேண்டும் " என்று அக்கறையும், உரிமையும் கலந்த வேண்டுகோளை அதிமுகவுக்கு விடுத்திருந்தார் தொல். திருமாவளவன்.

பெரிய வார்னிங்
இந்நிலையில், இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது.. பாஜக தலைவர்கள் அதிமுகவின் 2 தரப்பையும் சந்தித்து பேசியிருந்தார்கள்.. சட்டரீதியான விவகாரங்கள் ஒருபக்கம் இருந்தாலும், 2 டீமையும் ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ள போவதாகவும் சொல்லி உள்ளார்கள்... இந்த சூழலில்தான், திருமாவளவன் அதிமுகவுக்கு மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக கூறி, அதை கண்டித்து ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

திருமாவளவன்
இதற்கு மாநில துணை தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார்... மாநில பொது செயலாளர் சித்தீக், சையத் அலி முன்னிலை வகித்தனர். இதில் திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜமாஅத் தலைவர் பாக்கர், திருமுருகன் காந்தி உள்பட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, "பாஜகவை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்க்கிறார்கள்... ஆனால் எதிர்க்கட்சிகளாக ஒன்று சேர மறுக்கிறார்கள்... அவர்களை ஓரணியில் திரள விடாமல் பிஜேபி செய்கிறது. அவர்களுக்கு எதிராக கூட்டணி சேரும் கட்சிகளை சிதறடித்து விடுவார்கள்.

ஆபத்து ஆபத்து
அதிமுக இப்போது 3 அணியாக சிதறி கிடப்பதற்கு பாஜகதான் காரணம்.. பாஜக மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்திருக்கும்.. பாஜக தலையீட்டால் சசிகலா, தினகரன் ஓரங்கட்டப்பட்டு எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைத்தனர்.. இப்போது அவங்களையும் உடைத்து விட்டார்கள்... தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர்... அரசியல் ஆதாயத்துக்காக எந்த எல்லைக்கும் போவார்கள் இந்த பாஜகவினர்.. அதற்குள் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.. தவறவிட்டால், மறுபடியும் 2024-ல் ஆபத்து ஏற்படும்" என்றார் திருமாவளவன்.
-
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications