15 முறை.. சீமான் வீட்டிற்கே போய் சந்தித்த விஜய்.. தேடி தேடி மீட்டிங்.. இவர் என்ன இப்படி சொல்லுறாரே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமானை 15 முறை விஜய் தேடி வந்து பார்த்தார். வீடு தேடி தேடி வந்து பார்த்தார். அண்ணன் அண்ணன் என்று பின்னால் வந்தார். அப்படிப்பட்டவர் விமர்சனம் செய்துள்ளார் என்று நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிக கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளார். விஜய் கூறியது கொள்கையல்ல, கூமுட்டை! அதுவும் அழுகிய கூமுட்டை!.. ஒன்னு சாலையின் அந்த ஓரத்தில் நில்லு, இல்லை இந்த ஓரத்தில் நில்லு, நடுவுல நின்னா லாரி அடிச்சு செத்துப்போயிடுவே.. பாஜக மதவாதம் என்றால் காங்கிரஸ் மிதவாதமா? இந்தியை வலுக்கட்டாயமாக மாற்றியது காங்கிரஸ்; காங்கிரஸ், பாஜகவை விஜய் விமர்சிக்காதது ஏன்?" ரைமிங்கா வருகிறது என்பதற்காக எதையும் விஜய் பேசக் கூடாது.

seeman naam tamilar katchi vijay

திராவிடம் என்பது மக்களை பிளவுப்படுத்தி பார்ப்பதாகும். தமிழ் தேசியம் என்பது அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வது. விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் ஒன்றா? சாதி, மதம், இனம், மொழி என்று பிரிக்கிறார்கள் என்று விஜய் பேசுகிறார். சாதி மதத்தோடு இனத்தையும் மொழியையும் ஒப்பிடுவது சரியா? ஒவ்வொரு தேசிய இனத்தின் முகம் மொழி. மதமும் சாதியும் நமது அடையாளம் அல்ல மொழிதான் நமது அடையாளம்.

சேலத்தில் விவசாயிகள் போராட்டத்துக்கு 40 பேர் வந்தார்கள். கடை திறக்க வந்த நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் வந்தார்கள். விமானப்படை சாகசத்தைப் பார்க்க 15 லட்சம் பேர் வந்தார்கள். எங்கள் தலைவன் எங்களுக்கு கற்பித்தது.. 5 பேர் கூடினால் சாதிக்கலாம்.. 50 பேர் கூடினால் விவாதிக்கலாம். எனக்கு 36 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். எனது கூட்டம் 36 லட்சம் பேர். இப்போ எது பெரிய கூட்டம். இன்னொரு நடிகர் அழைத்தாலும் கூட்டம் வரும். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டம் இப்போது கூடிவிட்டதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இயக்குனர் களஞ்சியம் ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தம்பி விஜய்தான் கட்சி ஆரம்பிக்கும் முன் சீமானை பார்த்தார். சீமானை தேடி தேடி வந்து சந்திப்பு நடத்தினார். நிறைய ஆலோசனைகளை செய்தார். கட்சி நடத்துவது பற்றி ஆலோசனைகளை செய்தார். ஆனால் கட்சி ஆரம்பித்த பின் சீமானுக்கு எதிராக விஜய் மாறிவிட்டார். சீமானைதான் அவர் தனிப்பட்ட வகையில் தாக்கி பேசினார். சீமானை மட்டுமே தாக்கி பேசினார்.

நாங்கள் கத்தி பேச மாட்டோம். நாங்கள் டேட்டா சொல்ல மாட்டோம் என்றெல்லாம் பேசுகிறார் . சீமானின் பாடி லாங்குவேஜை கூட கிண்டல் செய்து பேசினார். அதன்பின்னர் அவர் அதை மாற்றிக்கொண்டார். முன் வரிசையில் இருந்த சிலர் அவரிடம் வேண்டாம் வேண்டாம் என்று கூறி உள்ளனர். இதன் காரணமாக நாம் செய்வது தவறு என்று உணர்ந்து அவர் நிறுத்திக்கொண்டார். தம்பி விஜய்தான் கட்சி ஆரம்பிக்கும் முன் சீமானை பார்த்தார். சீமானை தேடி தேடி வந்து சந்திப்பு நடத்தினார்.

இப்போது அதே சீமானை எதிர்த்து பேசுகிறார். சீமானை 15 முறை விஜய் தேடி வந்து பார்த்தார். வீடு தேடி தேடி வந்து பார்த்தார். அண்ணன் அண்ணன் என்று பின்னால் வந்தார். அப்படிப்பட்டவர் விமர்சனம் செய்துள்ளார். அவர் பதவியில் இருக்கிறாரா? என்ன கொடுமை? அதை விடுங்கள் திராவிடம் தமிழ் தேசியம் எங்கள் கொள்கை என்கிறார். இது என்ன கொடுமை? இதை எல்லாம் எப்படி அனுமதிக்க முடியும். இப்படிப்பட்ட கொள்கை கொண்டவரை நாங்கள் கண்டிப்பாக அடிப்போம், என்று இயக்குனர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+