விஜயகாந்துக்கு திடீர் சுவாச பிரச்சினை? ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சையா?
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக தலைவரும் முன்னாள் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு திடீரென சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கடந்த மாதம் இறுதியில் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணியும் , நடிகர் நாசரும் மியாட் மருத்துவமனையில் தலைமை மருத்துவரை சந்தித்து கேட்டறிந்தனர். அதில் விஜயகாந்த் தாமாகவே சுவாசிக்கிறார். அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை செய்ததாக கூறப்படும் தகவல்கள் எல்லாமே பொய்யானது. அப்படி எதுவும் செய்யவில்லை.
அவருக்கு வெறும் சளி பிரச்சினைக்குத்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் கூடிய விரைவில் வீடு திரும்புவார் என தலைமை மருத்துவர் தெரிவித்ததாக ஆர்.கே. செல்வமணி ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் கேப்டன் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள். வதந்தியை யாரும் நம்பாதீர்கள், அவர் விரைவில் வீடு திரும்பி நம்மை சந்திப்பார் என பிரேமலதா அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்றும் மீண்டும் ஒரு விளக்கத்தை பிரேமலதா வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என தெரிவித்ததுடன் அவருக்கு தீவிர சிகிச்சை எல்லாம் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதை பார்த்தவுடன் தொண்டர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி செய்யப்படவில்லை என்பது அவருடைய கழுத்தை பார்த்தாலே நன்றாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை பெருவெள்ளம் குறித்து பிரேமலதா பேசுகையில், கேப்டன் மீது ஏன் வன்மத்தை கக்குகிறீர்கள் என கேட்டு கண்ணீர் விட்டார். அவர் நன்றாக இருக்கும் போது அவர் மீது ஏன் வதந்திகளை பரப்பி பரபரப்பை கிளப்புகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு நுரையீரல் துறை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு முழுவதுமாக ஆக்ஸிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications