சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

VJ Chithra.. சித்ரா ரூமில் ஆணுறைகள்.. பரபர புரளிகள்.. ரிலீஸ் ஆகிறாரா ஹேமந்த்?.. பரபர கோர்ட் ஆர்டர்

நடிகை சித்ராவின் மரணத்தில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் யார் என்று தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்நிலையில், அது தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை கோர்ட் இன்று பிறப்பித்துள்ளது.

சித்ரா இறந்தபோதே, விசாரணை துவங்கிய சமயத்தில் ஏராளமான யூகங்களும், தகவல்களும், வெளியாகின.. அந்த யூகங்கள் ஒவ்வொன்றும் ஏதோ காற்று வாக்கில் வந்து, கடந்து சென்றுவிடவில்லை.. இன்னமும், வலுப்பெற்று, சித்ரா ரசிகர்கள் மத்தியில் வட்டமடித்து கொண்டுதான் இருக்கிறது.

இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு 4 மாதங்கள் தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்! இந்திய கோதுமை ஏற்றுமதிக்கு 4 மாதங்கள் தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்!

கடைத்திறப்பு விழாக்களுக்கு அதிகம் செல்வதால், அரசியல் பிரமுகர்களும், தொழிலதிபர்களும் சித்ராவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்தது. அதிலும், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வரிசையில் ஒரு பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பெயரும் அப்போது அடிபட்டது..

 ஹேம்நாத்

ஹேம்நாத்

அடுத்து, முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர், சித்ராவை புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வரவேண்டும் என்று டார்ச்சர் செய்து வந்ததாக, அவர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தெரியவந்தது. அடுத்து சித்ராவின் அறையில் நிறைய ஆணுறைகள் இருந்ததாகவும், ஒன்றாக சேர்ந்து வாழும் தம்பதி அறையில் இவைகள் ஏன் இருக்க வேண்டும் என்று சித்ராவின் தோழி கேள்வி எழுப்பியிருந்தார்.. சித்ராவை காரிலேயே வைத்து கொலை செய்து விட்டு, ரூமில் சடலத்தை தொங்கவிட்டதாகவும் சித்ரா தோழி ரேகா நாயர் சொல்லியிருந்தார்..

ஹேம்நாத்

ஹேம்நாத்

அடுத்து, ஹேம்நாத்திற்கு பணம்தான் முக்கியம்.. ஜாலியாக இருக்கணும்.. குடிப்பது, நினைத்த நேரத்தில் உடலுறவில் ஈடுபடுவது, நினைத்த பெண்களுடன் ஊர் சுற்றுவது என்று அவரை அறிந்தவர்கள் தகவலை கசிய விட்டார்கள்.. பின்னர், சம்பவத்தன்று சித்ராவுக்கு ஒரு போன் கால் வந்ததாகவும், அப்போது அவர் கோபமாக பேசியதாக சொல்கிறார்கள்.. பிறகு, அன்றைய தினம், ஹோட்டலுக்கு ஒரு மாஜி கார் வந்துபோனதாகவும் சொன்னார்கள்..

சித்ரா கார்

சித்ரா கார்

கடைசி நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை முடித்து விட்டு ஹோட்டல் ரூமுக்கு திரும்பியபோது அவரது காரில் 4 ஆண்கள் இருந்தார்கள், அப்போது சித்ராவின் கார் வேகமாக ரோட்டில் சென்றதாக சொன்னார்கள்.. இறுதியில் 4 பேருக்கு சித்ராவுடன் தொடர்பு இருந்தது, சித்ராவின் மரணத்துக்கு மாபியா கும்பல்தான் காரணம் என்று ஹேம்நாத் செய்தியாளர்களிடம் சொன்னார்... இத்தனை தகவல்களில் எது உண்மை என்று இப்போது வரை தெரியவில்லை.. அதேபோல சித்ராவின் மரணத்துக்கும் ஒரு விடையும் கிடைக்கவில்லை..

உத்தரவுகள்

உத்தரவுகள்

இதனிடையே சட்ட ரீதியான சில விஷயங்கள் நடந்துள்ளன.. ஹேம்நாத் மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது கோர்ட்.. ஆனாலும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு சித்ரா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.. தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் சென்னை ஹைகோர்ட்டில் முன்னதாக மனுத்தாக்கல் செய்திருந்தார்...

ஹேம்நாத்

ஹேம்நாத்

அதற்கேற்றார்போல், தற்கொலை செய்ய சித்ராவை ஹேம்நாத் தூண்டினார் என்பதற்காக எந்த ஆதாரமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது, அதனால், சித்ராவின் மரணத்திற்கும் ஹேம்நாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஹேம்நாத் தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் வாதாடினார். அதுமட்டுமல்லாமல், சித்ரா-ஹேமநாத் காதலித்து திருமணம் செய்துகொள்வதற்கு சித்ராவின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு காட்டியதே, சித்ரா அதிர்ச்சியான முடிவை எடுக்க காரணம் என்றும் ஹேம்நாத் தரப்பில் வாதாடப்பட்டது...

உடலுறவு

உடலுறவு

வரதட்சணை கேட்டு தொல்லை, என்று 498-A சட்டப்பிரிவில்தான் ஹேம்நாத்திற்கு எதிராக சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்... ஆனாலும், சித்ரா மரணத்தில் ஆர்டிஓ மேற்கொண்ட விசாரணைதான் இந்த வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது.. ஆர்டிஓ விசாரணையில், வரதட்சணை கேட்டு ஹேம்நாத் மிரட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹேம்நாத் தரப்பில் கோர்ட்டில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.. இந்த விவாதங்களை எல்லாம் ஏற்றுக்கொண்ட கோர்ட், சித்ராவின் கணவர் ஹேம்நாத்திற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது..

சித்ரா அப்பா

சித்ரா அப்பா

மேலும், விசாரணைக்கு ஹேம்நாத் நேரில் ஆஜராவதிலிருந்து நீதிமன்றம் விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த இடைக்கால தடைக்கு, சித்ராவின் குடும்பம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று சித்ராவின் அப்பா காமராஜ் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், மனு தொடர்பாக சித்ராவின் அப்பா பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆதங்கங்கள்

ஆதங்கங்கள்

எனினும், சித்ரா விவகாரத்தின் கொந்தளிப்பு இன்னும் ரசிகர்கள் மத்தியிலும், பெற்றோர் தரப்பிலும் அடங்கவில்லை.. ஒருபக்கம், மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கேட்டு, அவரது பெற்றோர் ஹேம்நாத் மீது மட்டுமே குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர்... மற்றொரு பக்கம், மரணம் தொடர்பாக வேறு யார் மீதும் புகார்கள் வராமல் உள்ளதாகவும், அது தொடர்பாக ஒருத்தர் மீதும் புகார்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆதங்கங்கள் எழுகின்றன.

டார்கெட் யார்?

டார்கெட் யார்?

உண்மையிலேயே ஹேம்நாத்தை மட்டும் பெற்றோர் தரப்பில் டார்கெட் செய்கிறார்களா? அல்லது இதில் தொடர்புடையவர்களை ஹேம்நாத் தான் மறைக்கிறாரா? அதுவும் தெரியவில்லை. ஆனால், ஹேம்நாத் குறித்து தகுந்த ஆதாரங்களை, சித்ராவின் அப்பா, நிரூபிக்காமல், வெறுமனே வாய்மொழி குற்றசாட்டுகளை அடுக்கி கொண்டு போனால், இந்த வழக்கில் இருந்து ஹேம்நாத் விடுவிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.. ஹேம்நாத் விடுதலையே ஆனாலும், சித்ராவின் மரணத்துக்கு விடை கிடைக்குமா என்பதே அவரது ரசிகர்களின் ஆதங்க கேள்வி..!

English summary
Did vj Chitra travel by car with four people and chennai high court issues new order on hemanth petition case நடிகை சித்ரா மரண வழக்கில் முக்கிய உத்தரவு ஒன்று கோர்ட் பிறப்பித்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X