Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சு பஞ்சா முடிஞ்சிருச்சே.. "ரகசிய" சந்திப்பு நடந்ததாமே.. எடப்பாடியே எதிர்பார்க்கல.. எல்லாமே மாறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக பாஜக மேலிடம் முயற்சிப்பதாக தெரிகிறது. அதிமுக விவகாரங்களில் தலையிடப்போவதில்லை என்று பாஜக தரப்பில் சொல்லிவிட்ட போதிலும்கூட, திரைமறைவு அரசியல் சூடுபிடித்து வருவதாக தெரிகிறது.

டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் இருவரும் இணைந்துள்ள நிலையில், தென்மண்டலத்தில் சமூக வாக்குகள் இவர்களுக்கு மேலும் பெருக போவதாகவும், இதனால், திமுக மற்றும் எடப்பாடி தரப்புக்கு செக் வைக்க தங்களால் முடியும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெருத்த நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்..

Did VK Sasikala meet Delhi bjp leaders and political action is taking place behind the scenes

எம்ஜிஆர்: ஆனால், இன்னொரு தரப்போ, ஓபிஎஸ் தேவையில்லாமல் இந்த வேலையை செய்துவிட்டார்.. அதிமுக என்ற பிரம்மாண்ட கட்சி அனைவருக்குமே பொதுவான கட்சியாக இருக்கும்போது, ஓபிஎஸ்ஸின் இந்த நடவடிக்கை, சாதி முத்திரையை குத்திவிடும் என்றும், இதனால், எடப்பாடி பழனிசாமிக்கே பிளஸ் பாயிண்ட்டாக இருக்க போகிறது என்றும் சொல்கிறார்கள்.

இதற்கு நடுவில், சசிகலா + ஓபிஎஸ் + தினகரன் ஆகிய 3 பேரின் போட்டோக்களையும் ஒன்றாக வைத்து, தென்மண்டலங்களில் போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.. "நாம் ஒன்றாக வேண்டும் - கழகம் வென்றாக வேண்டும்" என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர்கள் பளிச்சிட்டு கொண்டிருக்கின்றன.. இந்த போஸ்டரில் சசிகலா படம் இடம்பெற்றுள்ளது அதிமுகவினருக்கே அதிர்ச்சியை தந்து வருகிறதாம்..

போஸ்டர்கள்: காரணம், சசிகலாவை சந்திக்க போவதாக ஓபிஎஸ் அடிக்கடி சொல்லி வருகிறார்.. தினகரனை சந்தித்துவிட்டு வந்தபிறகுகூட, அடுத்து சசிகலாவை சந்திக்க போவதாக சொல்லி உள்ளார்.. ஆனால், இன்னும் சந்திக்கவில்லை.. அதற்குள் எப்படி சசிகலா போட்டோவை போஸ்டரில் அச்சடித்து ஒட்டியுள்ளார்கள்? என்ற ஆச்சரியம் கிளம்பி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு தகவல் கசிந்து வருகிறது.. சசிகலா ரகசியமாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிர்ச்சி வைத்தியம்: கடந்த 2 வருடமாகவே அதிமுகவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் சசிகலா.. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் தரப்பில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்தும், போதுமான பலன் கிடைக்கவில்லை.. எடப்பாடியின் பிடிவாதத்தையும் தளர்த்த முடியவில்லை.. கட்சியையும் தன்வசப்படுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியும் உயர்ந்து கொண்டே போவது சசிகலாவை அதிர வைத்தபடி இருந்தது.. சட்டரீதியான தீர்வு ஓபிஎஸ்ஸூக்கு கிடைக்கும் என்று பார்த்தால் அதிலும் தோல்வி கிடைத்து கொண்டே இருப்பதும் சசிகலாவுக்கு அதிர்ச்சியை தந்ததாக சொன்னார்கள்.

இதையடுத்துதான், பாஜக தலைவர்கள் துணையுடன் அதிமுகவில் மறுபடியும் சேர்ந்துவிடலாம் என்று கணக்கு போட்டுள்ளாராம்.. சமீபத்தில், கர்நாடகா பிரச்சாரத்துக்காக அமித்ஷா வந்திருந்தபோது, அவரை ரகசியமாக சந்தித்து பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.. இந்த சந்திப்பின்போது அமித்ஷாவிடம் சசிகலா நிறைய விஷயங்களை குறிப்பிட்டு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

முக்கியமாக, ஒருங்கிணைந்த அதிமுக உடனடியாக தேவை என்று எடுத்து சொன்னாராம். இதே கோரிக்கையைதான் கடந்த ஒருவருட காலமாகவே பாஜக, எடப்பாடியை வலியுறுத்தி வரும்நிலையில், சசிகலாவும் இதையே அமித்ஷாவிடம் பேசியதாக தெரிகிறது. இதைக்கேட்ட மேலிடமும், அப்படியானால், ஓபிஎஸ் - தினகரனை சந்திக்க வைப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும்படி ஐடியா தந்ததாம்.

அட்வைஸ் : அதாவது, 'முதலில் நீங்கள் ஒன்று சேருங்கள், அதற்கு பிறகு உங்கள் அனைவரையும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி பேசலாம்" என்று டெல்லி பாஜக சசிகலாவிடம் அறிவுறுத்தியதாம்.. இதற்கு பிறகுதான், தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்போது அடுத்தக்கட்டமாக, அதிமுகவில் மேலும் சில அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்கிறார்கள்.. அதிலும், அதிருப்தியில் உள்ளவர்கள் + பிரிந்து கிடப்பவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்க வைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருவதாக தெரிகிறது.. ஆனால், இதற்கு தனிக்கட்சி வைத்துள்ள தினகரன் சம்மதிப்பாரா? என்று தெரியவில்லை.. அதேபோல, ஒருங்கிணைப்பாளர் பதவியை வகித்து வந்த ஓபிஎஸ்ஸும் எடப்பாடி தலைமைக்கு கட்டுப்பட்டு நடப்பாரா? என்று தெரியவில்லை.

இணைவார்களா?: அப்படியே, அப்படி சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் 3 பேரும் அதிமுகவுக்குள் வந்தாலும், அவர்களுக்கு என்ன மாதிரியான பதவி, பொறுப்பு தரப்படும் என்ற கேள்வியும் உள்ளது.. இதையெல்லாம் கருத்தில் கொண்டே எடப்பாடி பழனிசாமி இவர்கள் 3 பேரையும் தவிர்த்து வருகிறார் என்றாலும், ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் பாஜக மேலிடம் பிடிவாதமாக உள்ளதாம்..

இதற்கெல்லாம் காரணம், திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதேயாகும்.. ஆளுக்கு ஒருபக்கம் பிரிந்து கிடப்பதால், திமுகவுக்கு தான் பிளஸ் பாயிண்ட்கள் அமையும் என்பதால், அதிமுக தலைவர்களை ஒன்றுசேர்க்க பாஜக முயன்று கொண்டிருக்கிறதாம்.. எனவே, விரைவில் சில மாற்றங்கள் அதிமுகவில் வரலாம் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+