Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா பேசிட்டாங்களாமே.. லைன்ல வந்தது யார் பாருங்க.. திமிறியெழுந்த எடப்பாடி.. "இலை'யில் வாடிய தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிவு அறிவிப்பு வந்ததுமே, தினகரன், ஓபிஎஸ் கூடாரம் பரபரப்பாகி உள்ளது.. இதில் சசிகலாவும் பிஸியாகிவிட்டாராம். இதுகுறித்து பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் பாஜக உறுதியாக உள்ளதைபோலவே, சசிகலாவும் உறுதியாக இருந்து வருகிறார். இதற்கு காரணம், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே.
சசிகலா லாபி: அதனால்தான், இப்போதுவரை, அதிமுக தலைவர்களை பற்றி ஒருவார்த்தைகூட கடுமையாக விமர்சிக்காமல் உள்ளார்.. இதுவே பழைய சசிகலாவென்றால், அவரது அணுகுமுறையே அதிரடியாக இருந்திருக்கும். 30 வருடம் அதிமுகவில் லாபி செய்தவர், இப்போது மென்மையான அரசியலை கையில் எடுத்து வருகிறார். கடிந்துகூட யாரையும் பேசாமல் இருக்கிறார்.

Did VK Sasikala talk with Edapadi Palanisamy and what happened in BJP AIADMK Alliance

தன்னை சந்திக்க வேண்டும் என்று பலவழிகளில் முயற்சித்து கொண்டிருக்கும் ஓபிஎஸ்ஸையும் சந்திக்காமல் உள்ளார்.. எடப்பாடி நடத்திய மதுரை மாநாட்டுக்கும் போகவில்லை, ஓபிஎஸ் நடத்திய திருச்சி மாநாட்டுக்கும் போகவில்லை. இதற்கு காரணம், அனைவருமே ஒன்று சேர்ந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்பதுதான்..

டிடிவி தினகரன்: அதுமட்டுமல்லாமல், சாதி முத்திரை தன்மீது எந்தரூபத்திலும் விழுந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்து வருகிறார். தினகரனுடன் இந்த நிமிடம்வரை இணையாமல் இருப்பதற்கும் இதுவே காரணமாக உள்ளதாக தெரிகிறது. அத்துடன், எடப்பாடி பழனிசாமியுடன் திவாகனுரனும் நெருக்கமாக இருந்து வரும்நிலையில், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தில் கறாராக இருந்து வருகிறார் சசிகலா.

இப்படிப்பட்ட சூழலில்தான், அதிமுக - பாஜக முறிந்துள்ளது.. இதை அதிமுகவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.. கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டதை அடுத்து ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில், சசிகலாவின் முகாமும் பரபரப்பாகி விட்டதாம்.

கேபி முனுசாமி: நேற்றிரவு 7 மணி வரை தலைமைக்கழகத்தில் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. சீனியர் லீடர்களுடன் விவாதித்தபடி இருந்த எடப்பாடி பழனிச்சாமி, "எல்லோரும் கிளம்புங்கள் ; இனி வருகிற ரியாக்‌ஷன்களை எதிர்கொள்வோம். எதுவாக இருந்தாலும் எனது கவனத்துக்கு கொண்டு வாருங்கள்" என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு, கே.பி.முனுசாமியுடன் சில விஷயங்களை மனம்விட்டு பேசியிருக்கிறார்.. குறிப்பாக. தம்பிதுரையின் டெல்லி லாபியில் பல துரோகங்கள் நடந்துள்ளது என்று கே.பி.முனுசாமியிடம் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

சசிகலா போன் : இப்படி இவர்கள் பகிர்ந்து கொண்டிருந்த நேரத்தில், கே.பி.முனுசாமியின் ஃபோனுக்கு சசிகலா வந்துள்ளார். அதைப்பார்த்து, சசிகலா லைன்ல வர்றாங்க என சொல்ல எடுத்து பேசுங்க, என்ன சொல்றாங்கன்னு கேளுங்க" என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல, சசிகலாவின் லைனை முனுசாமி அட்டெண்ட் பண்ணியிருக்கிறார்.

அப்போது, "என்,.டி.ஏ. கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய முடிவு பாராட்டுதலுக்குரியது. பழனிச்சாமியிடம் ஃபோனை கொடுக்க முடியுமா?" என்று சசிகலா சொன்னதும் எடப்பாடியிடம் ஃபோனை கொடுத்துள்ளார் முனுசாமி.

ஃபோனை எடப்பாடி வாங்கியதும், அவரிடமும், தற்போது எடுக்கப்பட்ட முடிவுக்கு வாழ்த்துக்களை சொல்லியுள்ளார் சசிகலா. வாழ்த்துகளைச் சொல்லி விட்டு ஃபோனை துண்டித்துக்கொண்டாராம். ஆனாலும், சசிகலா ஃபோன் செய்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம் எடப்பாடி பழனிச்சாமி.

க்ளைமேக்ஸ்: அதேசமயம், சசிகலாவிடம் போனில் பேசியதாக சொல்லப்படுவதே, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. அன்று மூத்த தலைவர் வைத்திலிங்கம் வீட்டு விசேஷத்தில், சசிகலா கலந்து கொள்ளவில்லை என்றபோதே, இது எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவாக பார்க்கப்பட்டது..

அத்துடன், சசிகலாவை பற்றியும் எடப்பாடி சமீபகாலமாகவே விமர்சிக்காமல் உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.. பாஜக கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய மாற்றங்கள் அதிமுகவுக்குள் நிகழும் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+