"பலருடன் உறவு".. ரூமில் வினோதினி நடத்திய "ஆபரேஷன்".. பல்ஸ் போயிடுச்சே.. அழுதபடியே இறந்த வேல்முருகன்
கணவரை காய்கறி நறுக்கும் கத்தியால் 2 முறை குத்தி கொன்று கொலை செய்துள்ளார் மனைவி
சென்னை: நடத்தையில் சந்தேகப்பட்டுவிட்டாராம் வேல்முருகன். அதனால், காய்கறி நறுக்கும் கத்தியால் கணவனை கொன்றுள்ளார் விநோதினி.. இந்த வழக்கை விசாரிக்கும்போது, அந்த கோர மரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
விருகம்பாக்கம் மதியழகன் நகர் கேகே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி.. மனைவி பெயர் வினோதினி.. 37 வயதாகும் வினோதினி, அக்கம் பக்கம் வீடுகளில், வீட்டு வேலை பார்த்து வருகிறார்.
வேல்முருகன் தினமும் தண்ணி அடிப்பாராம். வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதே போதையில்தான் வருவாராம்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வினோதினியிடம் ரகளையில் ஈடுபட்டு விடுவார்..

காய்கறி கத்தி
அந்தவகையில், கடந்த 9-ந்தேதியும் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் வேல்முருகன்.. இதனால் ஆத்திரம் அடைந்த வினோதினி, கணவனை கண்டித்தார்... அப்போது இருவருக்கும் தகராறு வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வினோதினி, பக்கத்தில் கிடந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து, வேல்முருகனை குத்திவிட்டார்.. 2 முறை ஆவேசமாக குத்தினாராம்.. இதில் வேல்முருகன் படுகாயமடைந்துள்ளார்.. ரத்தம் கொட்டி உள்ளது.. ஆனால், இதை பார்த்து வினோதினி பயந்துவிட்டார்.

ஆம்புலன்ஸ்
உயிருக்கு ஆபத்தான நிலையில் வேல்முருகன் இருப்பதை பார்த்ததுமே, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை.. அதனால், வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் வைத்து வினோதினி சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.. ஆனால், நேற்று முன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.. இதற்கு பிறகுதான், அவரை வினோதினி ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்... வேல்முருகன் உயிரிழந்துவிட்டதை சொல்லாமல், அங்கிருந்த டாக்டர்களிடம் வேல்முருகன் மதுபோதையில் தானாகவே கத்தியால் குத்தி கொண்டார் என்றார்.. ஆனால் டாக்டர்கள் பார்த்தபோதே, வேல்முருகன் உயிர் போயிருந்தது..

வேல்முருகன்
தானாகவே ஒருவர், கத்தியால் குத்திக்கொண்டால், அந்த அளவுக்கு ஆழமாக கத்திக்குத்து விழுந்திருக்காது என்பதால், டாக்டர்கள் சந்தேகமடைந்தனர்.. உடனடியாக இதுபற்றி விருகம்பாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்தனர்.. குடிபோதையில் தகராறு செய்தார் என்பதற்காகவே, கத்தியால் குத்தி கொன்றிருக்க முடியுமா? என்ற சந்தேகம் போலீசாருக்கும் எழுந்தது.. இதையடுத்து, வினோதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை ஆரம்பித்தனர். வேல்முருகனை கத்தியால் குத்தி கொலை செய்ததை வினோதினி ஒப்புக் கொண்டாராம். அவர் தந்த வாக்குமூலம் பற்றி போலீசார் பல்வேறு தகவல்களை சொல்லி உள்ளனர்.

கிச்சன்
வேல்முருகன் மதுவுக்கு அடிமையான நிலையில், வினோதினியின் நடத்தையிலும் வேல்முருகன் சந்தேகப்பட்டுள்ளார்... குடித்துவிட்டு வந்து அடிக்கடி இது தொடர்பாகவே அடித்து சித்ரவதை செய்துள்ளார். கடந்த 9ம் தேதி வேலை முடிந்து வேல்முருகன் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்... இதை பார்த்த வினோதினி போதையில் வந்த கணவனை கண்டித்துள்ளார். அப்போது வேல்முருகன், வினோதியை பலருடன் இணைத்து தவறாக பேசி அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, கிச்சனுக்குள் நுழைந்து, காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, வேல்முருகனை சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்துள்ளார்.

மெடிக்கல் ஷாப்
அன்றைய தினம், அவர் நிறைய தண்ணி அடித்திருந்ததால், சத்தமாக கத்தி அலறகூட முடியவில்லை.. ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.. இதை பார்த்து பயந்துபோன வினோதினி, போதை கணவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், வீட்டிலேயே சிகிச்சை தர முடிவெடுத்துள்ளார். அதனால், பக்கத்தில் இருக்கும், மெடிக்கல் ஷாப் ஒன்றில் காயத்துக்கான மருந்து, சர்ஜிகல் கிளாத் வாங்கி வந்து, ஒரு டாக்டரை போல் வினோதினியே சிகிச்சை தந்துள்ளார்.. அப்போது வேல்முருகன் வினோதினியிடம், "என்னை மன்னிச்சுடு, என்னை தயவு செய்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ, என் உயிரை காப்பாற்று என்று வேல்முருகன் அழுதுள்ளார்.. ஆனால், வினோதினி அதை மறுத்துள்ளார். வீட்டில் உள்ள ரூமிலேயே அடைத்து வைத்து வேல்முருகனுக்கு 2 நாட்கள் சிகிச்சை தந்து வந்துள்ளார்.

ரத்தம் உறைஞ்சிடுச்சு
ஒருவேளை வேல்முருகனை மருத்துவமனையில் சேர்த்தால், தான் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று பயந்துவிட்டாராம் வினோதினி.. எப்படியும் அவர் இறந்துவிடுவார் என்று எனக்கு தெரியும், அதனால்தான் அவரை வீட்டில் வைத்திருந்ததாகவும் விநோதினி சொல்கிறார்.. அதற்கேற்றபடி, நேரம் ஆக ஆக, வேல்முருகனுக்கு அதிகளவில் ரத்தம் உடம்பில் இருந்து வெளியேறி கொண்டே இருந்துள்ளது.. ஒருகட்டத்தில் அவர் சுயநினைவிழந்துள்ளார். அப்போதுதான் மேலும் பயந்துபோன வினோதினி, கணவன் குடித்துவிட்டு வைத்திருந்த மதுபாட்டிலை எடுத்து வந்து, யாருக்கும் சந்தேகம் வராதபடி அதில் உள்ள மதுவை வேல்முருகனின் உடல் மீதே ஊற்றியுள்ளார்.

காயங்கள்
பிறகு ஒன்றும் தெரியாதப்படி ஆம்புலன்ஸ் வரவழைத்து, கணவன் குடிபோதையில் தனக்கு தானே கத்தியால் குத்தி கொண்டதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.. அங்குள்ள டாக்டர்களிடம், எப்படியாவது என் கணவனை காப்பாற்றுங்கள் என்று கதறி கதறி அழுது நடித்துள்ளார். ஆனால், டாக்டர்கள் வேல்முருகனை ஆய்வு செய்த போது, அவர் ஒரு நாளுக்கு முன்பே இறந்துவிட்டது தெரியவந்தது... அதுமட்டுமல்ல, வேல்முருகனின் வயிற்றின் இடது புறத்தில் உள்ள 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள், ஏற்கனவே சிகிச்சை அளித்ததையும் டாக்டர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்..

குட்டு உடைஞ்சது
கணவனை கொன்றுவிட்டு, வினோதினி ஆஸ்பத்திரியில் வந்து நாடமாடிக் கொண்டிருப்பதும் டாக்டர்களுக்கு தெரிந்துவிட்டது.. ஆனால், அதை வினோதினியிடம் காட்டிக் கொள்ளாமல், ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருக்குமாறு டாக்டர்கள் அவரிடம் சொல்லி உள்ளனர்.. பிறகு, வேல்முருகன் கொலை செய்யப்பட்ட விஷயத்தை பற்றி விருகம்பாக்கம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதற்குபிறகுதான் வினோதியின் குட்டு வெளிப்பட்டுவிட்டது என்கிறார்கள். செல்போன், கத்தி ஆகியவற்றை வினோதினியிடம் இருந்து கைப்பற்றிய போலீசார், இப்போது அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

செப்டிக் செப்டிக்
கத்தியால் குத்தியதுடன், கணவர் உயிர் பிழைக்கக்கூடாது என்பதற்காக, உடம்பெல்லாம் செப்டிக் ஆகி, ரத்த அழுத்தம் மெல்ல மெல்ல குறைந்து, தானே சாகும் வகையில் வீட்டிலேயே வைத்து மனைவி சிகிச்சை அளித்துள்ளது, வேல்முருகனின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் அம்பலமானதை பார்த்து, டாக்டர்களே பதறிப்போய்விட்டார்களாம்.. ஆனால், குடிபோதையில் குடித்து குடித்து இறந்திருந்தால்கூட, இவ்வளவு கோரமான மரணம் நடந்திருக்காது போல.. சாகும்போது அளவுக்கு அதிகமாக துடிதுடித்தபடியே வேல்முருகனின் உயிர் பிரிந்துள்ளது...!!

அடுப்பில் கத்தி
இதில் இன்னொரு தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.. கணவன் குடித்துவிட்டு தகராறு செய்யும்போதெல்லாம் அவருக்கு சூடு வைத்துவிடுவாராம் வினோதினி.. பெரும்பாலும் குடிபோதையில் அவர் இருப்பதால், வலியால் அவர் கத்தி கூச்சலிட முடிவதில்லையாம். சம்பவத்தன்றும் சூடு வைப்பதற்காகத்தான், காய்கறி வெட்டும் கத்தியை எடுத்திருக்கிறார் வினோதினி.. கத்தியை நெருப்பில் காட்டி எடுத்து வந்து வேல்முருகனின் உடம்பெல்லாம் சூடு வைத்துள்ளார்.. அப்போது வேல்முருகன் வலியால் துடித்தபோது, கையில் சூடாக வைத்திருந்த கத்தியாலேயே வயிற்றில் 2 முறை குத்தி உள்ளது தெரியவந்துள்ளது .
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications