உரிமை தொகை 1000 ரூபாய் வந்துடுச்சா? இன்னும் இல்லையா? இதென்ன புதுசா சிக்கல்.. குழம்பும் மக்கள்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை குறித்த பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தி தருகிறது என்றாலும், இந்த உரிமைத்தொகை குறித்த சில சந்தேகங்கள் இன்னும் தீராமலேயே உள்ளது.
மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1,000, அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிமைத்தொகை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் கலெக்டர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள்: விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவிக்கிறார்களாம். அதனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு விரைந்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும்நிலையில், சில நடைமுறை சிக்கல்களும் கிளம்பி உள்ளன.
தமிழகமெங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில்
இதனிடையே, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், மறுபடியும் மேல்முறையீடு செய்து வருகிறார்கள். இதனால், இ சேவை மையங்களில் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதி வருகிறது... ஆங்காங்கே குழப்பங்களும் வெடித்து வருகிறது.
மேலூர் தாலுகா: அப்படித்தான், மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகத்தில், இ. சேவை மையம் இயங்கி வருகிறது.. இந்த மையத்தில் மறுபடியும் பதிவு செய்வதற்காக, பெண்கள் அதிகமாகவே நேற்று குவிந்துவிட்டனர்.. காலை முதலே பெண்கள் அலுவலகத்துக்கு படையெடுத்து வந்தனர்.. சில பெண்கள் கை குழந்தைகளுடன் வந்திருந்தனர்.. வயதான பெண்களும், காலையிலேயே வந்துவிட்டார்கள்.
இப்படியே நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், இ சேவை மையத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுவிட்டது. இதனால், கடுமையான ஏமாற்றமும், ஆவேசமுமடைந்த பெண்கள், கொந்தளித்து விட்டனர்.. திடீரென வட்டாட்சியர் செந்தாமரையை முற்றுகையிட்டு, முழக்கமிட தொடங்கினர்.. தகுதி இருந்தும்கூட, தங்களுக்கு உரிமைத்தொகை வரவில்லையே? என்று புகார் சொன்னார்கள்.
உரிமைத்தொகை: பிறகு, வட்டாட்சியர் செந்தாமரை அவர்களிடம் சமாதானம் பேசி, நிச்சயமாக உரிமைத்தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் அளித்தனர். அதற்கு பிறகே பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
இதைத்தவிர, புது சிக்கல் ஒன்று சிவகங்கை மாவட்டத்தில் முளைத்துள்ளது.. மாற்றுத்திறனாளிகள் பலர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்தனர். ஆனால் அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லையாம்.. காரணம், இவர்கள் எல்லாருமே 4 சக்கர வாகனத்தை வைத்திருப்பதாக கூறி, மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தின் இருபுறமும் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் இணைக்கப்படும்.
கோரிக்கைகள்: எனவே, இதனை 4 சக்கர வாகனங்களாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை நிஜமாகவே கார், வேன் போல, "4 சக்கர வாகனம்" என்று கருதி, மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம். எனவே, இதுபோன்ற குறைபாடுகளை எல்லாம் அரசு விரைந்து களைய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications