கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடா? கவலைப்படாதீங்க! உங்கள் சிலிண்டரில் ஒளிந்திருக்கும் ரூ.50 லட்சம் ரகசியம்!
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது நிலவி வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், சிலிண்டர் வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தெரியாத ஒரு மிகப்பெரிய 'ஜாக்பாட்' விஷயம் ஒன்று உள்ளது. அதுதான் ரூ.50 லட்சம் மதிப்பிலான காப்பீடு!
சிலிண்டர் வாங்கினால் இன்சூரன்ஸ் இலவசமா? ஆமாம்! நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கேஸ் ஏஜென்சியிடம் உருளையைப் பெறும்போது, அந்த சிலிண்டர் உங்கள் வீட்டிற்கு வந்த கணமே உங்களுக்கான காப்பீட்டுத் திட்டம் தொடங்கிவிடுகிறது. இதற்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட பிரீமியம் கட்டத் தேவையில்லை.

விபத்து ஏற்பட்டால்: சிலிண்டர் வெடிப்பினாலோ அல்லது எரிவாயு கசிவினாலோ விபத்து நேரிட்டால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வரை இழப்பீடு வழங்க வழிவகை உள்ளது.
மருத்துவச் செலவு: விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் வரை மருத்துவச் செலவுகள் வழங்கப்படுகின்றன.
தட்டுப்பாடான நேரத்தில் உஷார்!
சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் போது, சிலர் அவசரத்தில் எடையைச் சரிபார்க்காமல் அல்லது முறையான ரசீது இல்லாமல் சிலிண்டர்களை வாங்குகின்றனர். ஆனால், கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்
காலாவதி தேதி (Expiry Date): சிலிண்டரின் கைப்பிடியில் A-26, B-26 என எழுதப்பட்டிருக்கும். இதில் 'A' என்பது மார்ச் மாதத்தையும், '26' என்பது 2026-ஆம் ஆண்டையும் குறிக்கும். காலாவதியான சிலிண்டர்களை வாங்குவது உயிருக்கே ஆபத்தானது.
முறையான ரசீது: கேஸ் ஏஜென்சி வழங்கும் ஒரிஜினல் ரசீது இருந்தால் மட்டுமே விபத்து காலங்களில் உங்களால் காப்பீடு கோர முடியும்.

டிஜிட்டல் தீர்வு - கியூஆர் கோட் (QR Code)
தற்போது சிலிண்டர் திருட்டைத் தடுக்கவும், தட்டுப்பாட்டைச் சீர்செய்யவும் மத்திய அரசு சிலிண்டர்களில் QR Code வசதியைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உங்கள் சிலிண்டர் எங்கே இருக்கிறது, அதில் எவ்வளவு கேஸ் உள்ளது என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications