பார்க்கும் பார்வை.. கழுகு பார்வை! திமுகவிற்கு வந்த சோதனை! ஸ்டாலினை சுற்றி 4 பக்கமும் நோட் பண்ணீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் திமுகவிற்கு மிகப்பெரிய அவப்பெயரை கொடுத்துள்ளது. திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக கள்ளக்குறிச்சி பிரச்சனை உருவெடுத்துள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலினை சுற்றி 4 பக்கமும் முக்கியமான ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த விவகாரம்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. உள்ளூர் போலீசாருக்கு தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

kallakurichi mk stalin illicit liquor

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்து உள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவங்கூரை சேர்ந்த 34 வயது இளைஞர் மரணம் அடைந்துள்ளார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை கைது செய்துள்ளனர் சி.பி.சி.ஐ.டி. போலீசார்.

தொடரும் கைதுகள்; இன்று காலைதான் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அய்யாசாமி, தெய்வாரா ஆகியோரை கைது செய்தது சிபிசிஐடி போலீஸ். சிவக்குமார்(40), கதிரவன்(30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 59 உயர்ந்த நிலையில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது போக கல்வராயன்மலையில் சிறப்பு அதிரடிப்படையினர் 2வது நாளாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கள்ளச்சாராய ஊறல்களை கண்டுபிடித்து அழிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சத்தியமங்கலம், பவானி உள்ள முகாம்களில் இருந்து கல்வராயன்மலைக்கு விரைந்து உள்ளனர்.

ஸ்டாலின் கோபம்: கள்ளச்சாராய மரணத்தின் எண்ணிக்கைக் கூடுவது திமுக அரசுக்குத் தீரா விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது முதன் முறையாக கடும் கோபத்தில் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்போதைய முதல்வர் கருணாநிதி காலத்தில் அவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர், ஸ்டாலினிடம் சிலபல தகவல்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ''அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்தீர்கள். இப்போதாவது உங்களுக்குப் புரிந்திருக்கும்'' என்கிற ரீதியில் அந்த அட்வைஸ் நீள்கிறது.

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அனைத்தும் அறிந்தவராக, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணி புரியும் ஒரு போலீஸ்காரர் இருக் கிறார். அவர்தான் முந்தைய எஸ்.பி.யையும் கலெக்டரையும் தவறாக வழிநடத்தியிரு க்கிறார். ஆனால், அவரை தவிர பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த போலீஸ்காரர் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவருடன் சாதி ரீதியாக நெருக்கமானவர். அவரின் தலையீட்டின்படியே நடவடிக்கையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர்.

4 பக்கமும் சிக்கல்: திமுக எதிர்பார்க்காத பிரச்சனையாக கள்ளக்குறிச்சி பிரச்சனை உருவெடுத்துள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலினை சுற்றி 4 பக்கமும் முக்கியமான ஒரு பிரச்சனை உருவாகி இருக்கிறது.

1. எடப்பாடி பழனிசாமி இதை கெட்டியாக பிடித்துள்ளார். நேற்று போராட்டம் இன்று ஆளுநர் உடன் சந்திப்பு என்று மிக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.

2. இன்னொரு பக்கம் பாஜக ஆளுநர் தரப்பை சந்தித்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது தேசிய பிரச்சனையாக வெடிக்கும் வாய்ப்புகள் கூட உள்ளன. இதில் சிபிஐ விசாரணை என்ற கோணம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

3. விஜய் திடீரென செய்யும் தீவிர அரசியல் திமுகவிற்கு பிரஷராக மாறி உள்ளது.

4. கடைசியாக கட்சிக்கு உள்ளேய தலைமை பேச்சை கேட்காதவர்கள், ஆட்சியில் உத்தரவை மதிக்காத அதிகாரிகள், நிர்வாகிகள் ஆகியோரும் ஸ்டாலினுக்கு சிக்கலாக மாறி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+