ஆமா! ரயிலில் இதை நோட் பண்ணியிருக்கீங்களா.. ஏசி கோச்கள் நடுவில் மட்டுமே இருக்கே.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்து இருக்க முடியும். சொல்லி வைத்தால் போல் ரயிலின் ஏசி பெட்டிகள் எப்போதுமே நடுவில் தான் இருக்கும்... அது ஏன் என்று யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? அதற்கு பின்னால் உள்ள காரணத்தை இங்கே பார்க்கலாம்.
ரயில்களில் பயணம் செய்யாதவர்களே இருக்க முடியாது என சொல்லிவிடாலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் பயணிகளுடன் இரண்டறக் கலந்தது ரயில்.. அடிக்கடி ரயிலில் பயணம் செய்தாலும் ரயிலில் உள்ள பல விஷயங்களை நாம் கவனித்திருக்க மட்டோம்..அல்லது நமக்கு தெரியாமல் கூட இருந்து இருக்கலாம். அந்த வகையில் தான் சுமார் 24 பெட்டிகள் வரை கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் எப்போதுமே ஏசி பெட்டிகள் நடுவில் மட்டுமே இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கக் கூடும்.

கவனிக்கவில்லை என்றால் கூட இனி கவனித்து பாருங்கள்.. எந்த ரயிலை எடுத்தாலும் நடுவில் மட்டுமே ஏசி கோச்கள் இருக்கும். ஏசி பெட்டிகளில் முதலிலேயோ அல்லது கடைசியாகவே ஏன் எந்த ரயிலிலும் வைக்கப்படாமல் எழுதி வைத்தால் போல நடுவில் மட்டுமே ஏன் இருக்கிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? அதற்கு பின்னணியில் சில சுவாரசியமான தகவலும் உள்ளது. அது என்னவென்பதை இங்கே விரிவாக பர்க்கலாம்.
ரயில் பயணம்: இந்தியாவில் மக்கள் தங்கள் பயண தேவைக்கு அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து எதுவென்றால் ரயிலாகத்தான் இருக்கும். மலிவான கட்டணம், பாதுகாப்பான பயணம் ஆகியவற்றின் காரணமாக தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பயணிகளின் முதல் சாய்ஸ் ரயில்கள்தான். அதிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் செல்ல வேண்டும் என்றால் பயணிகள் கண்டிப்பாக ரயிலில் தான் செல்ல விருப்பப்படுவர்.
ஏனெனில் ரயிலில் கழிவறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் எந்த சிரம்மும் இன்றி செல்ல ரயில் பயணமே ஏதுவாக இருக்கும். ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இதனால், பயணிகள் முன்பே திட்டமிட்டு புக்கிங் செய்து கொள்ள முடியும் என்பதால் ரயில்களில் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைப்பது எல்லாம் குதிரைக் கொம்பு நிலைதான்.

ஏசி கோச்கள் நடுவில் இருக்க காரணம்: அதுவும் பண்டிகை நாட்களில் எல்லாம் நிலைமை சொல்லவே வேண்டாம். தட்கல் டிக்கெட்டுகள் கூட சில நிமிடங்களுக்குள் புக் ஆகிவிடும். பொதுப்பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். சரி அதெல்லாம் இருக்கட்டும் விஷயத்திற்கு வாருங்கள்.. என நினைப்பது புரிகிறது.. சரி விஷயத்திற்கு வருவோம்.. தொலைதுர ரயில்களில் பயணிகள் வசதிக்காக முதல் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், பொது பெட்டிகள் உள்ளவை பெரும்பாலான எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களில் இருப்பதை காண முடியும்.
நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்கள் என்றால் ரயிலில் ஒரு விஷயத்தை பார்த்து இருக்கக் கூடும். அதாவது ரயிலின் பொதுப்பெட்டிகள் என்ஜினுக்கு அடுத்தாற்போலவும் அதற்கு பிறகு ஸ்லீப்பர் கோச்களும் இருக்கும். ஏசி பெட்டிகள் எப்போதுமே நடுவில் தான் இருக்கும். அதன்பிறகு ஸ்லீப்பர் கோச்களும் பிறகு பொதுப்பெட்டிகளும் இருக்கும். ஏன் ஏசி பெட்டிகள் நடுவில் மட்டுமே ரயிலில் உள்ளது என்பதற்கான காரணம் எதையும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட வில்லை.
என்ஜின் சத்தம்: எனினும், அத்துறையை பற்றி நன்கு அறிந்தவர்கள் சொல்லும் கருத்து என்னவென்றால், ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும் இவ்வாறு நடுவில் வைக்கப்பட்டு இருக்கிறதாம். லக்கேஜ் கோச்கள் மற்றும் பொதுப் பெட்டிகள், ஸ்லீப்பர் கோச்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால், இரு பக்கமும் இதை பிரிப்பதன் மூலம் ரயிலின் எடை சமநிலை சரியாக இருக்கும் என்கிறார்கள்.
அது மட்டும் இன்றி ரயில் நிலையங்களில் வெளியேறும் பகுதி ரயில் நிலையங்களில் நடுவில் தான் இருக்கும். எனவே ஏசி கோச்களில் பயணிக்கும் பயணிகள் எளிதாக ரயிலில் வந்து ஏறிவிட முடியும். பெட்டிகளை தேடி அதிகம் அலைய வேண்டியது இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நீராவி என்ஜின்களுக்கு அருகில் ஏசி கோச்கள் இருந்தன. என்ஜின் சத்தம் பயணிகளுக்கு மிகவும் அசவுகரியமாக இருந்தது. இதை மனதில் வைத்து ஏசி பெட்டிகள் என்ஜினை ஒட்டி வைக்காமல் நடுவில் கொண்டு செல்லப்பட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications