"இதுதான் தமிழ்நாடு".. உதயநிதி அமைச்சராகும் அறிக்கையில் இருப்பதை நோட் பண்ணீங்களா? யாருங்க அது?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக நேற்று வெளியான செய்தி அறிக்கை பெரும் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை நாளை மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இணைக்கப்பட உள்ளார். நாளை காலை 9.30 மணிக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் இதை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாளை அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு அமைச்சரவை ஒருவழியாக மாற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பதவி ஏற்று 19 மாதங்களுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சரவை
பொதுவாக அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது தொடர்பான முடிவை முதல்வர் ஆளுநரிடம் அளிக்க வேண்டும். இதற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம். பொதுவாக இது போன்ற அமைச்சரவை மாற்றத்தில் ஆளுநர்கள் எதிர்க்கருத்து தெரிவிக்க மாட்டார்கள். அமைச்சரவை மாற்றம் இன்று மாலை நடக்கிறது என்றால் இன்று காலை கூட கடிதத்தை அனுப்ப முடியும். ஆளுநர் உடனே இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் விதி.

கடிதம்
இந்த நிலையில் நேற்று அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவிக்கு முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதை உடனே ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாடு அரசு அனுப்பிய கடிதத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இணைய உள்ளார். அவருக்கான பதவி ஏற்பு விழாவை டிசம்பரம் 14ம் தேதி காலை நடத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர். என் ரவியையும் கேட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு ஆளுநர் ஆர். என் ரவி உடனே ஒப்புக்கொண்டார்.

மாற்றம்
இதற்காக தற்போது ஆளுநர் ஆர். என் ரவி அலுவலகம் வெளியிட்டு இருக்கும் கடிதம்தான் வைரலாகி உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவியின் முதன்மை செயலாளர் ஆனந்த் பாட்டீல்தான் இந்த செய்தி அறிக்கையில் கையெழுத்து போட்டு இருக்கிறார். குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர், குடிசை மாற்று வாரியத்தின் இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வைத்து இருக்கிறார். 1998ல் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். அப்போதில் இருந்து தமிழ்நாடு கேடர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

தமிழ் கையெழுத்து
நேற்று அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்தில் இவர் தமிழில் கையெழுத்து போட்டுள்ளார். தமிழர் இல்லை என்றாலும், தமிழை கற்று அழகாக தமிழில் கையெழுத்து போட்டுள்ளார். இந்த செய்தி அறிக்கையில் அவர் தமிழில் கையெழுத்து போட்டது பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. பல காலமாக தமிழர்கள் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என்று பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டை சேராத ஒரு ஐஏஎஸ் அதிகாரி தமிழை கற்று கையெழுத்து போட்டு இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications