கள்ளக்குறிச்சி முதல் சென்னை வரை.. நெருக்கடியில் சிஎம் ஸ்டாலின்.. நடவடிக்கைகளை கவனித்தீர்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொல்லப்பட்ட விவகாரத்திலும் தமிழக காவல்துறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறி வருகின்றன. இதனால் நெருக்கடியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் வெறும் 2 மாதத்தில் சுமார் 20 படுகொலைகள் வரை நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. அண்மையில் பாஜக மாநில துணை தலைவர் திருப்பதி நாராயணன் வெளியிட்ட தகவலின் படி,

mk stalin Armstrong Chennai

1. 28/04/2024 - சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.

2. 29/02/2024 வண்டலூர் அருகே திமுக பிரமுகர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. அவர் தப்பிக்க முயன்றபோது, ​​அவரை துரத்திச் சென்று, கத்தியால் அவரது கை, கால்களை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

3. 23/05/ 2024, பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை: தப்பிய மர்ம நபருக்கு வலை.

4. 30/06/2024, சிவகங்கையில் 4 இரு சக்கர வாகனங்களில் வந்த 8 பேர் வெட்டியதில் இருவர் படுகொலை.

5. 15/02/2024, மதுரை வண்டியூரில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் வெட்டி படுகொலை.

6. 02/05/2024, நெல்லை காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் தன்சிங் படுகொலை செய்யப்பட்டு கண்டுபிடிப்பு.

7. 03/07.2024, சேலத்தில் அ தி மு க பிரமுகர் கூலிப்படையினரால் வெட்டி படுகொலை.

8.02/07/2024, வேலூரில், ரவுடி ராஜா என்கிற நபரை ஆறு பேர் கும்பகல் ஒன்று கொடூரமாக வெட்டிக் கொன்றது.

9. 20/05/2024, திருநெல்வேலி - நெல்லையில் பட்டப்பகலில் தீபக் ராஜா இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை.

10. 10/06/2024, கமுதி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் (51) மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

11. 30/06/2024, கடலூரில் அதிமுக நிர்வாகி மோட்டார் சைக்கிளில் சென்ற கும்பலால் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு.

12. கோவில்பட்டி - மீன் வியாபாரி உட்பட இருவர் வெட்டிபடுகொலை.

13. 29/04/2024 - தஞ்சாவூர் - இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களால் காய்கறி வியாபாரி வெட்டிபடுகொலை.

14. 03/07/2024, திருச்சி - நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - இளைஞர் வெட்டிப் படுகொலை; இருவர் கைது.

15. 27/04/2024 - மதுரை - மாட்டுத்தாவணியில், பட்ட பகலில் இளைஞர் வெட்டிப் படுகொலை- தனது தம்பியின் கொலைக்கு பழிக்குப்பழி!

16. 12/04/2024 - தூத்துக்குடி - இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேருக்கு மேற்பட்ட கும்பல் செந்தில் ஆறுமுகம் என்பவரை சராமரியாக ஓட விட்டு விரட்டி வெட்டிக் கொலை.

17. 12/06/2024, சென்னை, திருவான்மியூர் - வழக்கறிஞர் வெட்டி படுகொலை.

18. 22/05/2024, திண்டுக்கல் - யாகப்பன்பட்டி டாஸ்மாக் கடை அருகே திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி ஜோசப்(60) என்பவர் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை.

19. 30/03/2024, - மதுரையில் பயங்கரம்! மரத்தை வெட்டியதை தட்டி கேட்ட ரைஸ்மில் அதிபர் வெட்டிப் படுகொலை!

20. 29/04/2024 - திருநெல்வேலி, மதுபோதையில் நண்பரை வெட்டிப் படுகொலை செய்த இருவர் கைது.

21. 09/05/2024, தூத்துக்குடி - ஓசிக்கு மது பாட்டில் தர மறுப்பு, பார் ஊழியர் வெட்டிக் கொலை.

22. 05/07/2024, பி எஸ் பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவை ஒரு உதராணத்திற்கு தான். இது போன்ற நூற்றுக்கணக்கான படுகொலைகள் இந்த வருடத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளன. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதவை என்றாலும், இந்த கொலைகளில் பல ஒற்றுமைகள் உள்ளன.

1. பெரும்பாலான கொலைகளில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

2. கொலைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நடந்தவை.

3. கொலையாளிகள் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தினர்.

4. பெரும்பாலானோர் மது போதையிலோ அல்லது போதை பொருட்களின் ஆதிக்கத்திலோ தான் இந்த கொலைகளை செய்துள்ளனர்.

5. பெரும்பாலானோர் கூலிப்படைகளாகத்தான் செயல்பட்டுள்ளனர். அதாவது பணத்திற்காக கொலை செய்யும் கும்பல்கள்.

6. பழிவாங்குதல், பண விவகாரம், நில விவகாரம் போன்றவை தான் பெரும்பாலான படுகொலைகளுக்கு காரணம்" என்று திருப்பதி நாராயணன் அண்மையில் கூறியிருந்தார். இவர் மட்டுமல்ல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு விவாகரத்தில் ஆளும் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

அண்மையில் தான் கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கூட்டணி கட்சிகளுமே காவல்துறை மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. முதல்வர் ஸ்டாலின் காவல்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை இடம் மாற்றம் செய்த அரசு, கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்தது. மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களை சஸ்பெண்ட் செய்த அரசு பல அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்தது.

கள்ளக்குறிச்சி விவகாரமே இன்னும் முழுமையாக ஓயாத நிலையில், அடுத்தாக சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் மொத்த சென்னையையும் உலுக்கி உள்ளது. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் முற்றிலும் அரசு தோற்றுப்போய்விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆளும் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுமே இந்த விவகாரத்தில் காவல்துறையை சாடின..

இதையடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சந்தீப் ராய் ரத்தோர் தற்போது தமிழ்நாடு காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்குப் பதிலாக சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் பல இடங்களில் பார்களில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும், கூலிப்படை கலாச்சாரம் பெருகிவிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+