தொட்டது தப்பா? பாஜக மேடையில் மீண்டும் அவமதிக்கப்பட்ட வி.பி.துரைசாமி? கோபப்பட்ட பாஜக எம்.எல்.ஏ?

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக நடத்திய போராட்ட மேடையில் தனது தோள் மேல் கைவைத்த அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமியை பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி தட்டிவிடும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, செய்தித் தொடர்பாளர் நாராயண் திருப்பதி, நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் வணக்கம் சொல்லி வி.பி.துரைசாமி பேசத் தொடங்கியபோது அண்ணாமலை தாமதமாக போராட்டத்துக்கு வந்துள்ளார். அந்த சமயம் துரைசாமியின் பேச்சை இடைமறிக்கும் வகையில், மற்றொரு மைக்கில் பாஜக நிர்வாகி ஒருவர் அண்ணாமலை வருகிறார், வந்துகொண்டே இருக்கிறார் எனக்கூறியது வி.பி.துரைசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பாரத் மாதா கி ஜே முழக்கத்தால் கோபம்

பாரத் மாதா கி ஜே முழக்கத்தால் கோபம்

வி.பி.துரைசாமி மீண்டும் பேச்சை தொடங்க முற்பட்டபோது கீழே நின்றுகொண்டிருந்த பாஜக தொண்டர்கள் பாரத் மாதா கீ ஜே என முழக்கமிடத் தொடங்கினர். இதனால், அருகில் நின்ற நாராயணனிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் துரைசாமி. கோஷம் நின்றபிறகு துரைசாமியை பேச சொல்லி இருக்கின்றனர்.

 அசிங்கமா இருக்கு! மிரட்டுறீங்களா?

அசிங்கமா இருக்கு! மிரட்டுறீங்களா?

அப்போது அவர், "வேறு யாராவது வருவார்கள். எல்லோரும் வந்தபின் பேசலாம். எனக்கு அசிங்கமாக இருக்கிறது" என கூறினார்." மீண்டும் ஒரு நிர்வாகி பேச சொன்னபோது, "என்ன மிரட்டுகிறீர்களா?" எனக்கூறியது அங்கிருந்த கேமராக்களிலும் பதிவானது. பின்னர் மேடைக்கு வந்த அண்ணாமலையிடம் "நான் மட்டும்தான் இன்னும் பேசவில்லை, பேசட்டுமா?" என அனுமதி கேட்டார் வி.பி.துரைசாமி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளானது.

 எம்.ஆர்.காந்தி பின்னால் நின்ற துரைசாமி

எம்.ஆர்.காந்தி பின்னால் நின்ற துரைசாமி

இதனிடையே அதே போராட்ட மேடையில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அதில், நாராயணன் திருப்பதி மக்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டு இருந்தபோது அவர் அருகே நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி நின்றுகொண்டு இருந்தார். அவருக்கு பின்னால் வி.பி.துரைசாமி நின்றிருந்தார்.

 ஆத்திரமாக தட்டிவிடப்பட்ட துரைசாமியின் கை

ஆத்திரமாக தட்டிவிடப்பட்ட துரைசாமியின் கை

இந்த நிலையில், அப்போது எம்.ஆர்.காந்தியின் வலதுதோள் பட்டை மீது லேசாக வி.பி.துரைசாமியின் கை பட்டது. உடனே எம்.ஆர்.காந்தி சட்டையை தூக்கி லேசாக தட்டி விடுகிறார். அதன் பின்னர் இடது பக்க தோளில் வி.பி.துரைசாமி கைவைக்கிறார். ஆத்திரமடைந்த எம்.ஆர்.காந்தி போராட்ட மேடை என்றும் பார்க்காமல் வி.பி.துரைசாமியின் கையை அடித்து தட்டிவிடுகிறார். இதனால் வி.பி.துரைசாமியின் முகம் மாறுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

திமுகவில் எப்படி இருந்த மனுசன்!

திமுகவில் எப்படி இருந்த மனுசன்!

திமுகவில் துணை பொதுச் செயலாளராகவும், 2 முறை துணை சபாநாயகராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வி.பி.துரைசாமி, திமுகவில் சாதி பாகுபாடு இருப்பதாக குற்றம்சாட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அப்போது, அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகனை மாநில பாஜக தலைவராக தேர்ந்தெடுத்ததால் அக்கட்சியில் இணைவதாக கூறினார் வி.பி.துரைசாமி. இந்த நிலையில் அவரை பாஜக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மேடையில் நடத்திய விதம் குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+