டிஐஜி விஜயகுமார் தற்கொலை எனக்கு அதிர்ச்சி.. பணிச்சுமை.. 6 மாதமா லீவு தரலை.. சீமான் பகீர்
சென்னை: டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். ஆறு மாத காலமாக விடுமுறை கேட்டும் அவருக்கு கொடுக்கவில்லை என்றும் சீமான் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. காவல்துறை உயரதிகாரியின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பணிச்சுமையோ, வேறு எந்த பிரச்சினையோ இல்லை என்றும் மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை உயரதிகாரி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

விஜயகுமார் தற்கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜயகுமாரும் நானும் ரொம்ப நெருக்கம் உறவுக்காரர். எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு நிறைய அழுத்தம் இருந்தது. பணிச்சுமையும் இருந்தது. மிகச்சிறந்த அறிவாளி. எல்லோர் மீது அன்பாக இருப்பார். துணிச்சல்காரர். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் ஏன் இப்படி செய்தார் என்று யோசித்து கொண்டிருந்தேன்.
மன தடுமாற்றம் உள்ளவர்கள், கோழை அப்படி யாராவது இருந்தால் கூட பரவாயில்லை. துணிச்சலான காவல்துறை அதிகாரி இப்படி செய்து கொண்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துளி கூட நாங்கள் சிந்தித்து பார்க்கவில்லை. டிஐஜி நிலையில் இருக்கும் அதிகாரிக்கே இத்தனை அழுத்தம் இருக்கிறது என்றால் சாதாரண காவலர்களுக்கு எப்படி மன அழுத்தம் இருந்திருக்கும். பணிச்சுமை அதிகம் உள்ளது.

சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு விடுமுறை விட வேண்டும். விடுமுறை விட்டாலும் ஊதியத்தை பிடித்தம் செய்வதால் பலரும் அதனை விரும்பவில்லை. 6 மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தோடு சுற்றுலா செல்ல அனுமதிக்க வேண்டும். விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமல்ல என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எவ்வளவோ செலவு வருகிறது. சமாதி கட்டுவதற்கு பல கோடி செலவு செய்கிறார்கள் காவலர்கள் குடும்பத்திற்காக செலவு செய்யலாமே என்றும் சீமான் தெரிவித்தார்.
ஐபிஎஸ் படிக்கும் போதே காவல்துறையில் பணி செய்த விஐயகுமாருக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்துள்ளன. அதைப்பற்றி தனது முகநூல் பக்கத்தில் விஜயகுமார் பதிவிட்டுள்ளார். தேர்வுக்காக விடுமுறை கேட்டால் டிரான்ஸ்பர்தான் பரிசாக கிடைக்கும் என்றும் அப்போதே தனக்கு மன உளைச்சல் இருந்தது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் விஐயகுமார் ஐபிஎஸ்.
-
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications