இப்படித்தான் சின்னத்தை தேர்வு செய்தோம்.. பரிசுப் பெட்டி கிடைத்தது எப்படி? டிடிவி தினகரன் விளக்கம்!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது எப்படி என்று அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது எப்படி என்று அதன் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்து இருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம் பிரச்சனை தற்போது முடிவிற்கு வந்துள்ளது. அந்த கட்சிக்கு அவர்கள் கேட்டது போல குக்கர் சின்னம் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்று காலை இதற்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தங்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் கிடைத்ததற்கு அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சின்னம் அனுப்பியது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்துள்ள பேட்டியில், தேர்தல் ஆணையம் எங்களுக்கு மொத்தம் 36 சின்னங்களை அனுப்பியது. அந்த பொதுப்பட்டியல் சின்னத்தில் இருந்து ஒன்றை தேர்வு செய்ய சொன்னார்கள். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினோம்.

யார் நினைவு
அந்த பட்டியலில் பரிசுப்பெட்டி சின்னத்தை பார்த்ததும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுதான் வந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் திட்டம்தான் எனக்கு நினைவிற்கு வந்தது. அதனால் கடைசியில் பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்வு செய்தேன். சென்டிமென்ட் அடிப்படையில் இந்த சின்னத்தை தேர்வு செய்தோம்.

தேர்வு செய்தோம்
அதன்பின் அந்த சின்னத்தை தேர்வு செய்து அனுப்பினோம். எங்களுக்கு நேற்று இரவு தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது. இந்த சின்னம் கிடைத்தது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி உடனடியாக சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையத்திற்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சின்னம் கிடைக்க கூடாது
எங்களுக்கு சின்னம் கிடைக்க கூடாது என்பதற்காக அதிமுக பெரிய அளவில் கஷ்டப்பட்டது. ஆனால் அவர்களால் அப்படி எதுவும் கெட்டது முடியவில்லை. அதிமுக எங்களை கட்டுப்படுத்த பார்க்கிறது. இன்று கூட என் ரூமில் சோதனை செய்தார்கள். இப்போது சோதனைகளை செய்து எங்களை முடக்க பார்க்கிறார்கள். இந்த அரசு மிகவும் சீப்பாக நடந்து கொள்கிறது, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications