"மைதா, ரவை எதுவும் இல்லாமல்... வாயிலேயே வடை சுடுபவர் பிரதமர் மோடி!" திண்டுக்கல் லியோனி சாடல்
சென்னை: திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியைத் திண்டுக்கல் லியோனி சாடி பேசினார்.
Recommended Video
சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்பட்ட இந்த பாசறை கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

திமுக பாசறை
சென்னை வட கிழக்கு மாவட்டச் செயலாளர் சுதர்சனம், திண்டுக்கல் லியோனி திருவொற்றியூர், மண்டல குழு தலைவர் தனியரசு மற்றும் பல மாமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சாதனைகள்
மேலும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்குச் சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி, கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை விளக்கிப் பேசினார்.

பெண்கள் நலத்திட்டம்
தற்போதைய தமிழக முதல்வர் அனைவருக்கும் முன்னோடியாக திகழ்கிறார் என்று குறிப்பிட்ட திண்டுக்கல் லியோனி, திராவிட ஆட்சியைப் பொருத்தவரை தமிழக முதல்வர் பெண்களுக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செய்துள்ளார் என்றும் அரசுப் பள்ளியில் படித்த மாணவி கல்லூரிக்குச் செல்லும் பொழுது மாதம் 1000 ரூபாய் திட்டம் என்பது வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது என்றும் தெரிவித்தார்.

வடை
மேலும், பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற திட்டங்களைச் செய்து வருபவர் தமிழக முதலமைச்சர் என்று பெருமிதமாக கூறினார். தொடர்ந்து மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் சாடிய அவர், பிரதமர் நரேந்திர மோடியைப் பொறுத்தவரையில் வெறும் வாயிலேயே வடை சுடுவதாகக் கூறினார். மைதா, ரவை என எதுவுமே இல்லாமல் வெறும் வாயிலேயே வடை சுடுவதாக விமர்சித்தார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications