அரங்கமே அதிர்ந்தது! திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன ஒரு வார்த்தை.. அதிமுக பொதுக்குழுவில் எழுந்த ஆரவாரம்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி பற்றி அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன ஒரு வார்த்தையால் அதிமுக பொதுக்குழு அரங்கமே கரகோஷம், ஆரவாரத்தால் அதிர்ந்தது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை எடப்பாடி பழனிசாமி முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். மேலும், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள், தீர்மானங்களை வழிமொழிந்தனர்.
இன்றைய அதிமுக பொதுக்குழுவில் திமுக அரசைக் கண்டித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் மீனவர்களை வஞ்சிப்பது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சிப்பது என திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதேபோல, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடந்த அத்துமீறல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தப் பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பாக, இந்த பொதுக்குழுவை நடத்தித் தருமாறு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனை கேட்டு முன்மொழிந்தார் எடப்பாடி பழனிசாமி. அதனை வழிமொழிந்து பேசிய அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமியை வானளவாவப் புகழ்ந்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், "கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர், வருங்கால முதலமைச்சர், புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்" என்றார். வருங்கால முதலமைச்சர் என திண்டுக்கல் சீனிவாசன் சொன்னதும், அரங்கில் கூடியிருந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய உற்சாக ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications