மீண்டும் கல்லூரிக்கு போகலாம்.. அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு.. எப்போது இருந்து தெரியுமா?
சென்னை : ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு பிறகு பொறியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மாதம் 7ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றன. மேலும் தேர்வுகளும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற்று வந்தன.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் கலை கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் மற்றும் அரியர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக பிப்ரவரி 1 முதல் 20 தேதி வரை நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

ஆன்லைன் தேர்வு
ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது போல ஆன்லைன் மூலமே கல்லூரி தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், கொரோனா பாதிப்பும் குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. மாவட்டங்களில் ஆயிரக்கணக்கில் இருந்த பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு குறைவு
பாதிப்பு குறைந்ததையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. மழலையர் பள்ளிகள் முதல் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளது. கருணா பாதுகாப்பு நடவடிக்களை பின்பற்றி பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் தேர்வுகள் நிறைவடைய உள்ளன.

நேரடி வகுப்புகள்
இதையடுத்து தேர்வுகளுக்கு பிறகு பொறியியல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் மாதம் 7 ஆம் தேதியிலிருந்து மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நிறைவடைந்து அதற்குப் பிறகு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

செமாஸ்டர் எழுத்து தேர்வுகள்
அதன்படி மார்ச் 7ஆம் தேதி இரண்டு மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச்சு மாதம் 7ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 11ம் தேதி வரை நடைபெறும் என்றும், ஜூன் 22ஆம் தேதி முதல் நடப்பு செமஸ்டருக்கான எழுத்துத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications