மகளிர் உரிமை தொகை.. பணம் கிடைக்காதவர்கள் என்ன செய்யணும்.. இனி ரொம்பவே ஈஸி! இதை படிங்க முதல்ல
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மேஜர் மாற்றம் விரைவில் வர உள்ளது.
பொதுமக்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த மகளிர் உரிமை தொகை திட்டம் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தகுதி வாய்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஏற்கனவே மாதம் ரூ.1000 கிடைத்துவிட்டது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ரொம்ப ஈஸி: இதற்கிடையே இதில் மெகா மாற்றம் வர இருக்கிறது. அதாவது இப்போது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மேல்முறையீடு செய்ய இ-சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால், அங்கே செல்லாமல் நேரடியாகப் பெண்களே மேல்முறையீடு செய்யும் வகையில் சாப்ட்வேரில் தேவையான மாற்றங்களைச் செய்யத் தமிழ்நாடு அரசு ரெடியாகி வருகிறது.
இதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் இன்னும் சில நாட்களில் இதன் பணிகள் நிறைவடையும் என்றும் தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து மேல்முறையீடு செய்ய இ சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அந்த அதிகாரி, "இது மிகப் பெரிய திட்டம். பல கோடி பேர் விண்ணப்பித்தனர். இதனால் அனைத்தையும் கருத்தில் கொண்டே முடிவெடுத்து வருகிறோம்.
மாற்றம்: தொழில்நுட்பம் என்றால் அதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும்.. அனைத்து சிக்கல்களும் 15 நாட்களில் தீர்க்கப்படும். இப்போதே இதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. மேல்முறையீடு செய்ய இ சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டி உள்ளது குறித்துப் பல வித கருத்துகள் பார்க்க முடிகிறது. விரைவில் இதில் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றம் வரும்" என்று அவர் தெரிவித்தார்.
1.63 கோடி பேர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்த நிலையில், அதில் சுமார் 1.06 கோடி விண்ணப்பங்கள் தகுதி பெற்றதாகக் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஏற்கனவே முதல் மாதம் ரூ. 1000 தொகை அளிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக மெசேஜ் பெற்றவர்கள், அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீடு 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யும் போது வருவாய் கோட்ட அலுவலர்கள் அதில் இறுதி முடிவை எடுப்பார்கள். ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு விண்ணப்பங்களை அரசிடம் உள்ள டேட்டாக்களை வைத்து பரீசிலானை செய்வார்கள். அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேல்முறையீடு செய்வது குறித்து தமிழ்நாடு முழுக்க சிறப்பு முகாம்களை நடத்தத் தமிழ்நாடு அரசிடம் எதாவது திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அந்த மூத்த அதிகாரி, "இ-சேவை மையங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் முதல்வரின் உதவி மையங்களில் எளிதாக மேல்முறையீடு செய்யலாம். என்பதால் இதற்காகத் தனியாகச் சிறப்பு முகாம்கள் எதுவும் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார்.
ஓய்வூதியம் பெறுவோர்: அரசு ஓய்வூதியம் பெறுவோருக்கும் இந்த மகளிர் உரிமை தொகை கிடைக்காது எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இதுவும் பொதுமக்களிடையே அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. ஓய்வூதியம் என்பது வேலை செய்யும் காலத்தில் தங்களிடம் பிடித்தம் செய்த தொகையில் இருந்தே தரப்படும் நிலையில், இதற்காக உரிமை தொகையை நிராகரிப்பது சரியானது இல்லை என்பது அவர்கள் வாதம்.
இவை எல்லாம் ஆங்காங்கே எழும் சின்ன சின்ன பிரச்சினைகள் என்று குறிப்பிட்ட அந்த மூத்த அதிகாரி, இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் சிறிது கால அவகாசம் தேவை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் புதிதாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் சில காலத்தில் அதற்கான நடவடிக்கையும் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இப்போது மேல்முறையீட்டு மனுக்களைக் கையாள்வது தங்கள் முதன்மையான இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications