'பகுத்தறிவாளர்' மாரிமுத்து 'புது கட்டிடம் பலி கேட்கும்' 'நம்பிக்கையின்' சாட்சியமாகிப் போனாரே!
சென்னை: தம்மை ஒரு பகுத்தறிவாளர் என திரைத்துறையில் இருந்து கொண்டு பிரகடனப்படுத்திக் கொண்டவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் புது வீடு ஒன்றில் கால் பதிக்க வைக்க முடியாமல் காலம் அவரை அழைத்துக் கொண்டது பெருந்துயரம்.
திரைத்துறையில் கவிஞர் வைரமுத்துவின் உதவியாளர், உதவி இயக்குநர், இயக்குநர் என படிநிலைகளைக் கடந்து கடைசியாக துணை நடிகர் என்ற நிலைக்கு அப்பால் குணச்சித்திர நடிகராக ஜொலித்தவர். பரியேறும் பெருமாளில் ஜாதி பெருமிதக் குடும்பத்தை சேர்ந்தவராகவும் இறுதி காட்சியில் முரணான நிலை எடுப்பவராகவும் தம்மை வெளிப்படுத்தி இருப்பார்.

டிவி விவாதங்களில் பகிரங்கமாக உன் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லை, உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை, உன் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என சொற்களை அரிவாள் போல வீசியவர். இதனால் விவாத அரங்கங்கள் அதிர்ந்து போய் உறைந்து நின்றன.
திரைத்துறையில் இருந்து கொண்டு இப்படி வெளிப்படையாக, கம்பீரமாக பகுத்தறிவு சித்தாந்தத்தை முழங்கியவர். நெற்றியில் குங்குமம் இருக்கும்.. குலதெய்வம் எனும் தாத்தா வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர்.. ஆனால் பெருந்தெய்வ கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இது தொடர்பாக அண்மையில் சன் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூட இதனை சுட்டிக்காட்டி இருந்தார். எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லை என அந்தப் பேட்டியில் மாரிமுத்து கூறியிருந்தார்.
ஆனால் காலத்தின் கோலம் வேறு ஒன்றாக அமைந்து போனதை எப்படிச் சொல்வது? பொதுவாக புதிய கட்டிடங்கள், புதிய வீடு வாங்கும் போது வீட்டில் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கும்; பலி கேட்கும்; ரத்த காவு கேட்கும் என்பதெல்லாம் பொதவான ஒரு நம்பிக்கை. இதனை மூட நம்பிக்கை என ஒதுக்கி வைப்பவரும் உண்டு. இந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்வோரும் உண்டு. ஆனால் இன்னொரு புது வீட்டில் கால் பதிக காத்திருந்தவராம் நடிகர் மாரிமுத்து.. அதற்குள் இப்படியாகி விட்டதே என திரை உலக சாக்கள் டிவியில் பேட்டி கொடுக்கும் போது
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்
பகுத்தறிவை நம்பியவர்
தாத்தன் எனும் குலதெய்வத்தை வணங்கியவர்
காலத்தின் கோலம்
புது கட்டிடம் பலி கேட்கும் நம்பிக்கைக்கு
சாட்சியமாகிப் போகிறார்
என்றுதான் எழுத முடிகிறது!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications