நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவர் விஜயகாந்த்.. உடல் நலம் பெற இயக்குநர் அமீர் பிரார்த்தனை!
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், உடல்நலம் பெற்று வீடு திரும்ப இயக்குநர் அமீர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டு விட்டார். தேமுதிக கட்சிக் கூட்டங்களில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தே பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளி, இடைவிடாத இருமல் காரணமாக விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதால் உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக, விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், செயற்கை சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டு, அவர் இயற்கையாக சுவாசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விஜயகாந்த் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை என்ற அதிர்ச்சி தகவலை இன்று வெளியிட்டது மருத்துவமனை நிர்வாகம்.
விஜயகாந்த்துக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமடைய அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த அறிக்கை வழக்கமான அறிக்கைதானே தவிர அதில் பதற்றப்படுவதற்கோ பயப்படுவதற்கோ ஒன்றும் இல்லை. கேப்டன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் நிச்சயம் சந்திப்பார், அதுவரை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான அமீர், விஜயகாந்த் உடல்நலம் பெற்று வீடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரையுலகின் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன்.
வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை ஏழைகளாய் உழல்வோரை கண்டு உளம் பதைத்த வள்ளலாரைப் போல நம்மிடையே திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர், "இலனென்றும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள" எனும் குறள் வழி வாழ்ந்த ஈகைத் தமிழன் - கேப்டன் விரைவில் உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications