சூர்யாவை விட்டுடுங்க.. உங்கள் தகுதிக்கு இங்கு வரவேண்டாம்.. அன்புமணிக்கு பாரதிராஜா வேண்டுகோள்

அன்புமணிக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன... சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே" என்று இயக்குனர் பாரதிராஜா அன்புமணி ராமதாஸை கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லி விமர்சனங்களும், சர்ச்சைகளும் கிளம்பி உள்ளன.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கு நடிகர் சூர்யா விளக்கம் தந்து பதிலளித்தும், பாமக தரப்பு தன்னுடைய பிடிவாதத்தை தளர்த்தவில்லை.. மாறாக, இந்த விவகாரம் தொடர்பாக ஜெய்பீம் படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் நேற்று சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 பாரதிராஜா

பாரதிராஜா

இப்படிப்பட்ட சூழலில்தான் சூர்யாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார்... தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற ரீதியில், இது தொடர்பாக கடித வடிவில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அதில், அந்த கடிதத்தை அன்புமணிக்கே நேரடியாக எழுதியதுடன், சில வேண்டுகோள்களையும் விளக்கங்களையும் பாரதிராஜா அதில் தெரிவித்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

 அன்புமணி

அன்புமணி

"சகோதரர் அன்புமணிக்கு வணக்கம், இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன். திரைத்துறை என்பது எல்லாவற்றையும் பேசக்கூடியது.

சினிமா

சினிமா


கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம்பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்குதளம். பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவே முயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது.

 வரவேற்பு

வரவேற்பு

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர். அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே 'ஜெய்பீம்'. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம். கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

 பூத கண்ணாடி

பூத கண்ணாடி

அதில் பூதக்கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும். இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான். அன்று என் படம் 'வேதம் புதிது' முடக்க முயற்சித்தபோது புரட்சித்தலைவர் உடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது? அது போன்றதொரு படைப்புதான் 'ஜெய் பீம்' படமும். இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

 மாற்றம் நிகழுமா?

மாற்றம் நிகழுமா?

தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்துகொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும் தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர். அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

சுதந்திரம்

சுதந்திரம்

அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும்.

 நடுவண் அரசு

நடுவண் அரசு

சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே. நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும். எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

Recommended Video

    Jai Bhim பற்றி Surya முன்பு வைக்கப்படும் கேள்விகள் | Anbumani Ramadoss | Oneindia Tamil
     கருத்துருவாக்கம்

    கருத்துருவாக்கம்

    இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்?

     நெருப்பு துகள்

    நெருப்பு துகள்

    ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை. எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரிசெய்துகொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். நன்றி! எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும் பாரதிராஜா" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆறுதல்

    ஆறுதல்

    கடந்த சில நாட்களாகவே ஜெய்பீம் பட பிரச்சனை வெடித்து வரும் நிலையில், பாமக தரப்பில் நிறைய மிரட்டல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழலில், பாரதிராஜாவின் இந்த கடிதம் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது.. திரையுலகில் இருந்து டைரக்டர் ரஞ்சித் யாருமே குரல் கொடுக்கவில்லை என்ற ஏக்க குரல்கள் எழுந்து வந்த நிலையில், பாரதிராஜாவின் இந்த கனத்த ஆறுதல், பெருத்த நம்பிக்கையை சூர்யா தரப்பில் ஏற்படுத்தி வருவதாகவே கருதப்படுகிறது..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+