யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயும், இயக்குனர் சீமானும் தனித்தனி அணிகளாக களம் இறங்குகின்றனர். இந்த நிலையில் சீமானும் அவரது தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தனக்கு தோன்றுகிறது எனவும், அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம் எனக் கூறியிருக்கிறார் இயக்குனர் சேரன்.
2026 சட்டமன்ற தேர்தல் களம் பரபரப்பாகி வரும் நிலையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து நாம் தமிழர் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் நடிகர் இயக்குனருமான சேரன்.

2026 சட்டசபைத் தேர்தல்
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது. எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆக வேண்டும்.
இயக்குனர் சேரன்
ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை.
சீமானின் தம்பி
அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.
வாரிசு அரசியல்
இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்.. கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப் போகிறோமா?" என கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications