பெரிய புராணத்திற்கும், கிறிஸ்தவ தேம்பாவணிக்கும் ஒரே மாதிரி மார்க் தருவதா? இயக்குநர் இசக்கி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிகளில் பெரிய புராணத்திற்கும், தேம்பாவணிக்கும் ஒரே மதிப்பெண் வழங்குவது தவறு என்று, பரமசிவன் பாத்திமா திரைப்பட இயக்குநரான இசக்கி தெரிவித்துள்ளார்.

இசக்கி இயக்கி, விமல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள, பரமசிவன் பாத்திமா திரைப்படத்தில் கிறிஸ்தவ மதமாற்றத்தை விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Hindu Christian Isakki

இந்த நிலையில் இசக்கி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பரமசிவன் பாத்திமா படத்தில், இந்த மண்ணின் அடையாளமான பெரியபுராணத்திற்கும் இத்தாலி பாதிரியார் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) எழுதிய வெள்ளைக்கார மத நூலான தேம்பாவணிக்கும் ஒரே மார்க் பள்ளிகளில், அளித்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டியுள்ளேன்.
இப்ப இதில் என்ன பிரச்சினை என்றால் வெள்ளைக்காரன் அடையாளத்திற்கு மாறியவர்கள் (கிறிஸ்தவர்களை குறிப்பிடுகிறார்) தேம்பாவணி படிப்பாங்களா பெரியபுராணம் படிப்பாங்களா? இத்தனைக்கும் வெள்ளைக்காரனே எங்கேயும் இதை பாடத்திட்டத்தில் வைக்கல. அப்ப வைத்தது யார்?

நான் படித்த கிறிஸ்து பள்ளியில் அது அரசு சம்பளத்தில் நடக்கிறது ஆனா கிருஸ்துவ பள்ளினுதான் படித்தவன் என்றுதான் சொல்கிட்டு வருகிறோம்.
இது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் பொருந்தும்

சரி விசயத்துக்கு வருகிறேன். எனக்கு பெரியபுராணம் எடுத்த லூர்து டீச்சர். பெரியபுராணம் பாடம் நடத்திவிட்டு, "இதல்லாம் நம்புறமாதிரியா இருக்கு, எதோ பாடம் நடத்தனும்னு அவ்வளவுதான்.." என தேம்பாவணியை விலாவாரியாக நடத்தினார். அது ஏசுவின் வளர்ப்பு தந்தையை பற்றியதாம். இப்ப சொல்லுங்க நம்ம அடையாளம் நம்ம உறவுகளாலேயே கொச்சைப் படுத்தப்படுகிறதா? இல்லையா? - இவ்வாறு பரமசிவன் பாத்திமா இயக்குநர் இசக்கி தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் தெரிவித்தார்.

இது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+