''ராஜ்கிரண் அவர்களே.. இத்தனை நாட்களாக எங்கே தூங்கிக் கொண்டிருந்தீர்?'' சீமானுக்கு ஆதரவாக களஞ்சியம்!
சென்னை: நடிகர் ராஜ்கிரண் இதுவரை எத்தனைமுறை இஸ்லாமிய மக்களுக்காக போராட முன் வந்துள்ளார் என இயக்குநர் களஞ்சியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமியர்கள் -கிறிஸ்துவர்களை சாத்தானின் பிள்ளைகள் என சீமான் விமர்சித்தது பெரும் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், சீமானுக்கு ஆதரவாக இயக்குநர் களஞ்சியம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ராஜ்கிரணுக்கு ஏராளமான கேள்விகளை முன் வைத்துள்ளார். களஞ்சியத்தின் ட்விட்டர் பதிவு வருமாறு;

''குறைந்தபட்சம் இஸ்லாமிய மக்களுக்கு மக்களின் பிரச்சினைகளுக்காக குரலாவது கொடுத்திருக்கிறாரா? குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வந்த போது இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் வீதியில் வந்து நின்ற போது ஐயா ராஜ்கிரன் எங்கிருந்தார்?
தெருவுக்குத் தெரு சாகின்பார்க் அமைத்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இஸ்மியர்கள் போராடிய போது, நாங்கள் எல்லாம் தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தபோது ஐயா ராஜ்கிரன் என்ன செய்து கொண்டிருந்தார்?
இஸ்லாமியர்களை இழிவு செய்து கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் வந்த போது, எங்கே போயிருந்தீர்கள் ஐயா ராஜ்கிரன் அவர்களே..? குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாய் கொலை செய்து, இஸ்லாமிய பெண்களை கற்பழித்து, பச்சிளம் குழந்தைகளை கூட தீயிட்டு கொளுத்திய சம்பவத்தை ஆவண படமாக்கி பிபிசி நிறுவனம் வெளியிட்ட போது தமிழக அரசு தமிழகத்தில் வெளியிட தடை விதித்தது. அப்பொழுது எங்கு உறங்கிக் கொண்டிருந்தீர்கள் ராஜ்கிரன் அவர்களே..?
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை பட்டு கிடக்கிற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருந்தபோது நீங்கள் தமிழகத்தில் இல்லையா ராஜ்கிரன் அவர்களே...?
திடீரென்று இப்பொழுது வந்து ஆதி அந்தம் எதுவும் தெரியாமல் பொங்குவதற்கு காரணம் என்ன ஐயா ராஜ்கிரன் அவர்களே..
இஸ்லாமியர்களுக்காக தொடர்ந்து போராடி நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் மீது எத்தனை வழக்குகள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
இசுலாமியர்களுக்காக தொடர்ந்து களமாடிக் கொண்டிருப்பவர் செந்தமிழன் சீமான் அவர்கள். நேரம் இருந்தால் இணையத்தில் தேடுங்கள் காணொளிகள் சாட்சிகளாய் கிடைக்கும்.
மோடிகளுக்கும்,கேடிகளுக்கும், மன்னர் குடும்பத்திற்கும், மகாராணியின் வாரிசுகளுக்கும், வாக்களித்து வாங்கி ஏமாந்து போவதைவிட
மாற்று அரசியல் கருத்தியலான தமிழ் தேசியத்திற்கு வாக்களிப்பது தமிழ் இசுலாமியர்களின் எதிர்கால நலனுக்கு நல்லது என்பதை புரிந்து கொள்ளுங்கள் ராஜ்கிரண் அவர்களே..''












Click it and Unblock the Notifications