20 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டேன்.. இதுவும் சாதிய கொடுமை தான்.. பழ கருப்பையா மீது கரு பழனியப்பன் புகார்
சென்னை: பழ கருப்பையா தன்னை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்து வருவதாகவும், இதுவும் ஒரு சாதிய வன்கொடுமை தான் என்றும் இயக்குனரும், நடிகருமான கரு பழனியப்பன் கூறியுள்ளார். மேலும் 20 ஆண்டு காலத்தில் நான் என்னவெல்லாம் நெருக்குதலுக்கு உள்ளானேன் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாராக கொடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் திராவிட இயக்க சிந்தனையாளராகவும், சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தும் வருகிறார். இந்த நிலையில் இவர் தனது பெரியப்பாவான பழ கருப்பையா தன்னை சாதிய வன்கொடுமை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். திமுக, காங்கிரஸ், அதிமுக, மக்கள் நீதி மய்யம் என பல்வேறு கட்சிகளில் பயணித்த பழ கருப்பையா மீது புகார் தெரிவித்து உள்ளார்.

நான் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்காக என்னை கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்து வருவதாக புகார் கூறியிருக்கிறார். இதுவும் ஒரு சாதிய வன்கொடுமை தான் என்று கூறும் அவர், இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு பழனியப்பன் கூறியதாவது:-
ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பேசும் போது, முதல் முறையாக நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்வில் நான் ஒடுக்கப்பட்டதை, புறம் தள்ளப்பட்டதை, சாதிய ரீதியாக எனக்கு ஏற்பட்ட நெருக்குதல்களை முதல் முறையாக மனம் திறந்து பேசினேன். இதனை தொடர்ந்து நான் சென்னையில் நேற்று ஒரு யூடியூப் சேனலில் இது பற்றி விரிவாக நான் பேசியிருந்தது எல்லாருக்கும் தெரிந்தது தான்.
அதனை வெறுமனே யூடியூப் சேனலில் சொல்வதால் அது சரியாக வராது. அப்போ அதை முறையாக சட்டத்திற்கு உட்பட்டு செய்தால் தான் சரியாக வரும். எனவே அந்த சேனலில் என்னவெல்லாம் சொன்னேனோ அதை எல்லாம், இந்த 20 ஆண்டு காலத்தில் நான் என்னவெல்லாம் நெருக்குதலுக்கு உள்ளானேன் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாராக கொடுத்துள்ளேன்.
நான் சொல்ல விரும்புவது, இந்த சூழலில் 2025 ஆம் ஆண்டில் இத்தனை படிப்புக்கு பிறகும் இன்னமும் சாதிய ரீதியாக ஒடுக்குமுறைகள் இருந்துகொண்டே தான் இருக்கிறது என்பதற்கு அல்ல. இணைப்பு என்பது சாதாரணம். திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது. அதனை விட்டுட வேண்டியது தானே.. நான் அப்படி தேர்ந்தெடுக்கின்றேன். அதை அப்படியே விட்டுவிட வேண்டியது தானே.
அதனை திரும்ப திரும்ப சொல்லி.. நேரடியாக தாக்காமல் மறைமுகமாக செய்வது சாதிய வன்கொடுமை தான். அழுத்தத்தை கொடுத்து, உறவுகளோடு சேராதே என்று சொல்வது, உறவுகளை சேராதே என்று சொல்வதும் சாதிய வன்கொடுமை தான். எனக்கு என்னைய யார் எல்லாம் ஆதரிக்கிறார்களோ அவர்களை எல்லாம் வெளியே தள்ளுறது.
தன்னை பெரிய மனிதராக காட்டிக்கொள்வதற்கு இப்படித்தான் செய்கிறார்கள். அதனை அவர்கள் செய்யக் கூடாது என்று சொன்னால் நாம் சட்டத்தின் படி தான் அதனை அணுக வேண்டும். இதன்படி தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் கொடுத்து இருக்கிறேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications