கரு.பழனியப்பன் கருப்பு சிவப்பு கரை வேட்டி தான் கட்டவில்லையே தவிர.. முழுநேர அரசியல்வாதி அவதாரம்?
சென்னை: இயக்குநர் கரு.பழனியப்பன் இன்னும் கருப்பு சிவப்பு கரை வேட்டி தான் கட்டவில்லையே தவிர அவரும் திமுககாரர் தான் என்பதை போல் பேசியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கரு.பழனியப்பனை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் பார்த்திபன் கனவு, மந்திரப் புன்னகை, சிவப்பதிகாரம், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் பார்த்திபன், எழில் உள்ளிடோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் தமிழா தமிழா உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நெறியாள்கை செய்திருக்கிறார். பத்திரிகையாளராக இருந்து சினிமா இயக்குநரான கரு.பழனியப்பன் அடுத்து அரசியல்வாதி ஆவதற்கான எல்லா வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தனக்கு முன்பெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை என்றும் இதைச் சொல்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை எனவும் கூறியுள்ள உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கரு பழனியப்பன் நிறைய புத்தகங்களை தன்னிடம் தந்து வாசிக்கச் சொல்வார் எனக் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இசையாய் கலைஞர் என்ற நிகழ்ச்சியில் பேசும் போது இதனைக் குறிப்பிட்டார் அமைச்சர் உதயநிதி. மேலும் அவர் பேசியதாவது;
''கலைஞர் தனது 20ஆவது வயதில் முதல் நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்தின் பெயர் பழனியப்பன்' அன்றைக்கு கலைஞரின் பழனியப்பன் நாடகத்துக்கு என்ன வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு இங்கிருக்கும் நம் இயக்குநர் கரு.பழனியப்பனுக்கும் கிடைத்து வருகிறது. அவர் இன்னும் கறுப்பு சிவப்பு வேட்டி மட்டும்தான் கட்டவில்லை. ''
''எனக்கு இதற்கு முன்பெல்லாம் புத்தகம் படிக்கும் பழக்கமில்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. கோவிட் காலத்தில் எல்லோரும் வீட்டில் அடங்கி இருந்தோம். அப்போதுதான் புத்தகங்கள் அதிகம் வாசித்தேன். இயக்குநர் கரு பழனியப்பன் நிறைய புத்தகங்கள் தந்து வாசிக்கச் சொல்வார்.''
கலைஞரை மேடைகளில் நிருபராக பார்த்த பழனியப்பன், பலமுறை அதை மேடையில் சொல்லி இருக்கிறார். மதுரையில் ஒரு மாநாட்டில் ஒரு பத்திரிகையாளராக செய்தியாளாராக நெருங்கிப் பழகியதைச் சொல்லி இருக்கிறார். முக்கியமாக கழக இளைஞர் அணி முன்னெடுக்கும் பணிகளில் தொடர்ந்து கைகோர்த்து செயல்பட்டு வருகிறார். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications