உங்க போட்டோவ DP-யில வைக்காதீங்க.. வச்சா இப்படிதான் ஆகும்! பெண்களுக்கு இயக்குநர் மோகன்ஜி புது அட்வைஸ்
சென்னை: சமீப காலங்களாக போட்டோஷாப் சாஃப்ட்வேரை பயன்படுத்தி, பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் டிஜிட்டல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இயக்குநர் மோகன்ஜி, பெண்கள் தங்கள் வாட்ஸ்அப் DPயில் தங்களுடைய போட்டோவுக்கு பதில் குடும்பத்தின் போட்டோவை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நீண்ட காலமாக தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நவீன காலங்களில் இந்த குற்றங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. போட்டோஷாப் போன்ற புதிய சாஃப்ட்வேர்கள் பெண்களை ஆபாசமாக சித்தரிக்க தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற குற்றங்களை செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற குற்றங்களை தடுப்பது குறித்து அவ்வப்போது காவலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட இயக்குநர் மோகன்ஜி இந்த குற்றங்களை தடுப்பது குறித்து சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சென்னை திருவொற்றியூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர், "சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் காவாலா பாடல் வெளியாகியிருந்தது. அதில் தமன்னா நடனமாடியிருந்தார். ஆனால் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதில் சிம்ரன் நடனமாடுவதை போல சில வீடியோக்கள் வெளியாகியிருந்தன. இதை முதல் முறையாக பார்ப்பவர்கள் உண்மையில் சிம்ரன்தான் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்று நினைத்துக்கொள்வார்கள்.
அந்த அளவுக்கு டெக்னாலஜி இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. வாட்ஸ்அப்பில் நீங்கள் வைக்கும் போட்டோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை தப்பான வீடியோவில் பயன்படுத்தினால் என்ன செய்வீர்கள். எங்கு சென்று புகார் கொடுப்பீர்கள்? எத்தனை புகார்களை காவல்துறை எடுத்து சரி செய்யும்? எனவே யோசித்து குடும்பமாக இருக்கும் போட்டோ, பிக்ஸல் குறைவாக இருக்கும் போட்டோக்களை DPஆக பயன்படுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.
பெண்கள் மீதான குற்றங்களுக்கு பெண்களை காரணமாக கூறுவதை முதலில் நிறுத்த வேண்டும் என்று முற்போக்கு அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில் மோகன்ஜியின் இக்கருத்து பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. பெண்களுக்கு அட்வைஸ் செய்வதற்கு பதில் ஆண்களுக்கு இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட வெண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என்று இந்த அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications