இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்!
சென்னை: ராயபுரம் தொகுதியில் உள்ள என் வீட்டிற்கு வந்த 4 பெண்கள் ரூ 8000 கூப்பனை வழங்கிவிட்டு திமுக ஜெயித்தால் மட்டுமே இந்த கூப்பன் செல்லும் என அவர்கள் கூறியதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இராயபுரம் சட்டசபை தொகுதியில் உள்ள என் வீட்டுக்கு நாலு தாய்மார்கள் வந்தாங்க.. எங்க வாசலில் 5 குடும்பங்கள்.. 5 வீட்டிலும், ரேசன் கார்டு பெற்று கொண்டு அதை அவர்கள் phone-ல் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு ரேசன் கார்டுக்கு ரூ.8000 ரூபாய் கூப்பன் கொடுத்தார்கள்.

குடும்ப தலைவியிடம் தான் தருவேன் என அடம் வேறு.. கடைசியாக திமுக விற்கு ஓட்டு போட்டு நாங்கள் ஜெயித்தால் மட்டுமே இது செல்லும், வெற்றி பெற்ற மறு நாளே, எப்படி, மறு நாளே இதை பயன்படுத்தி கொள்ளலாம், எனவே 8000 வேண்டுமென்றால் ஓட்டு போடுங்கள், இந்த கூப்பன் பத்திரம் என தகவல் வேறு தந்து விட்டு கிளம்பினார்கள்.
இந்த காலத்திலே இப்படி என்றால் என் தாத்தா காலத்தில் எப்படி பேசி ஓட்டு வாங்கி இருப்பார்கள் , விஞ்ஞானிகள். இவ்வாறு இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார். ஏற்கெனவே பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில் குமார் இந்த கூப்பனை விநியோகித்து வாக்கு சேகரித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என சொல்லப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் தற்போது வைரலாகி வருவது ரூ 8000 கூப்பன்தான். இந்த தேர்தல் அறிக்கை தயாரிப்பில் இருந்த கனிமொழி கூறுகையில், "Choice is yours" என்று கூறி, நம்முடைய முதலமைச்சர் எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பனை வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார். அந்த கூப்பனை பயன்படுத்தி, நீங்கள் விரும்பிய எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். வீட்டில் டிவி இருக்கிறதா? அதை மாற்றி இன்னும் பெரிய டிவி வாங்க வேண்டுமா? பழைய டிவியை கொடுத்து, இந்த 8000 ரூபாய் கூப்பனை பயன்படுத்தி புதிய டிவி வாங்கிக் கொள்ளலாம். அதனால், 8,000 ரூபாய் கூப்பனை பயன்படுத்தி, உங்களுக்கு தேவையானதை நீங்கள் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
மகளிருக்கு ஃபிரிட்ஜ் வழங்குவதாக அதிமுக கூறியுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையை யாரும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள். நமது தேர்தல் அறிக்கையில், மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி அவர்கள் வீட்டு உபயோகத்திற்குத் தேவையான எந்தப் பொருளையும் வாங்கிக் கொள்ளலாம். சுயதொழில் தொடங்குவதற்காக கிரைண்டரும் வாங்கிக் கொள்ளலாம்.
மகளிருக்காக ரூ 8 ஆயிரம் வழங்கக் கூடிய கூப்பனை எப்படி செயல்படுத்த போகிறோம் என்றால் வருமான வரி செலுத்தாமல் இருக்கக் கூடிய பெண்களுக்கு இந்த கூப்பன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் கடைகளில், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதிமுக கொடுக்கும் பிரிட்ஜ் என்பது பலரது வீடுகளில் இருக்கலாம். தேவைப்படும் பொருளை வாங்குவதற்குரிய சாய்ஸ் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்கப்படும்.
ஒரு டிவியை வைத்திருப்பார்கள். அதை Upgrade செய்ய விரும்புவார்கள். எனவே இந்த கூப்பனை வைத்து மாற்றிக் கொள்ளலாம். செம்மொழி பூங்காக்களை அறிவித்திருக்கிறோம், பருவநிலை மாற்றத்தையும் கணக்கில் எடுத்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications