செல்ல மகளின் இறப்பால் இடிந்து போன விஜய் ஆண்டனி.. காலை முதல் துணையாக இருந்து வரும் பிரபல இயக்குநர்!
சென்னை: விஜய் ஆண்டனி மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது முதல் கடைசி வரை இயக்குநர் மோகன்ஜி துணையாக இருந்து வருகிறார்.
விஜய் ஆண்டனி கடந்த 2006ஆம் ஆண்டு பாத்திமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாத்திமா டிவி சேனலின் தொகுப்பாளினியாக பணியாற்றினார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியை பேட்டி எடுத்த போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார். இவர்களுக்கு மீரா, லாரா ஆகிய இருமகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் மீரா, இளையவர் லாரா. விஜய் ஆண்டனி ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் தற்போது ரத்தம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு சென்றார். இன்று அதிகாலை 3 மணி அளவில் மீரா தனது தந்தையின் அறையில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கியிருந்த காட்சியை பார்த்த வீட்டு பணியாளர் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அவரை அருகில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி போலீஸார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த போது விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என சொல்லப்படுகிறது. செய்தி கேட்டதும் பதறியடித்துக் கொண்டு வந்த விஜய் ஆண்டனி நிலைகுலைந்துள்ளார். அவரது மனைவியும் மீராவின் தங்கையும் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை முதலே விஜய் ஆண்டனிக்கு இயக்குநர் மோகன் ஜி உறுதுணையாக இருந்து வருகிறார். ஓமந்தூரார் மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு சென்றது முதல் உடல் வீட்டுக்கு கொண்டு வருவது வரை, அடுத்ததடுத்த சடங்குகளுக்கு ஏற்பாடுகளை செய்வது என விஜய் ஆண்டனிக்கு உதவியாக இருந்து வருகிறார் மோகன் ஜி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications