திருப்பரங்குன்றத்தில் தர்காவை அப்புறப்படுத்திவிட்டு! கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி- பா.ரஞ்சித்
சென்னை: தமிழகத்தில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டும் என பாஜக செயல்படுவதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டினார். தமிழகத்தை அயோத்தியாக மாற்ற வேண்டும் என்றும் பாஜக முயற்சிக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டும் என பாஜக செயல்பட்டு கொண்டிருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.
மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்.
பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது.
@CMOTamilnadu என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவுடன் கோயிலுக்கு சென்ற பாஜக, இந்து அமைப்பினர், அங்கு விளக்கேற்றாமல் உச்சி பிள்ளையார் கோயில் தூணில் விளக்கேற்றியதால் ஆத்திரம் அடைந்தனர்.
பின்னர் தீபத்தூணில் விளக்கேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
பாஜகவினர் சொல்லும் தீபத்தூணில் 1920 ஆம் ஆண்டு முதல் விளக்கேற்றுவதில்லையாம். அதற்கு பதிலாக உச்சி பிள்ளையார் கோயில் தீபத் தூணில்தான் 100 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றப்படுகிறதாம். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நடைமுறையை மாற்றி உச்சியில் உள்ள தூணில் பாஜக விளக்கேற்ற சொல்கிறது. அந்த தூணில் இருந்து தர்கா 15 மீட்டர் தொலைவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications