"உயர்ஜாதியா".. இதுதான் இளையராஜாவை விமர்சிக்கும் முறையா?.. ஈவிகேஎஸ் இளங்கோவனை விமர்சித்த பா ரஞ்சித்
சென்னை: பணமும் புகழும் வந்தவுடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே என இளையராஜாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்ததை இயக்குநர் பா ரஞ்சித் கண்டித்துள்ளார்.
Recommended Video
இசையமைப்பாளர் இளையராஜா ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷனின் அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதினார். அதில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை அம்பேத்கர் இருந்திருந்தால் பெருமைப்பட்டிருப்பார் என்றும் அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்றும் எழுதியிருந்தார்.
இது பல்வேறு விமர்சனத்திற்கு வழிவகுத்தது. இதனை திரும்ப பெற வேண்டும் என பலர் வலியுறுத்தினர். மேலும் சமூகவலைதளங்களில் இளையராஜாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

பிரதமர் மோடி
இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தை தான் திரும்ப பெற போவதில்லை என இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து இவர் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஈரோட்டில் நடந்த விழாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உயர்ஜாதி
அவர் பேசுகையில் பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழகத்தில் சில அகராதிகள் இருக்கிறாங்க. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என சொல்லி கொள்கிறார்கள். இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் சர்ச்சை பேச்சு
வறுமையில் சாப்பிட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்ததை ஏற்றுக் கொள்வதும் பணமும் புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்து கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்கிறேன் என தெரிந்திருக்கும். வயது 80க்கு மேல் ஆகிறது, பேரு இளையராஜாவாம். அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? என ஜாதியை குறிப்பிட்டு இவர் பேசியது சரச்சைக்குள்ளாகியுள்ளது.
|
பா ரஞ்சித் ட்விட்டர்
ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேச்சுக்கு இயக்குநர் பா ரஞ்சித் கண்டித்துள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது என பா ரஞ்சித் விமர்சித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications