விடியல் ஆட்சியிலும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை-திமுக அரசு மீது நக்கலுடன் பா.ரஞ்சித் சாடல்
சென்னை: திமுகவின் விடியல் ஆட்சியிலும் சென்னை பூர்வகுடிகள் மீது அடக்குமுறை ஏவப்படுக்கிறதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும் வருகிறார். தமது படைப்புகள் மூலமாக மட்டுமல்ல சமூக பிரச்சனைகளிலும் பா.ரஞ்சித் தமது குரலை பதிவு செய்து வருகிறார்.

இளையராஜா விவகாரம்
அண்மையில் இசைஞானி இளையராஜா, பிரதமர் மோடியை அண்ணல் அம்பேதக்ருடன் ஒப்பிட்டு நூல் ஒன்றுக்கு முன்னுரை எழுதி இருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. அம்பேத்கருடன் மோடியை இளையராஜா ஒப்பிட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. அதேநேரத்தில் இளையராஜாவை ஜாதிய அடிப்படையில் சிலரும் விமர்சித்தனர். இதற்கு பா.ரஞ்சித் கடும் எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார். இது விவாதப் பொருளானது. குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளையராஜா மீதான விமர்சனத்தை உக்கிரமாக எதிர்த்

இந்தி சர்ச்சை
இந்தி தேசிய மொழி என்பது தொடர்பான சர்ச்சையில் தமிழ் மொழிதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற ஆணித்தரமாக கூறினார். அத்துடன் இந்தியாவில் திராவிடர்கள் மதிக்கப்பட வேண்டும்; திராவிடர்களாக அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் பா.ரஞ்சித் கூறியிருந்தார். இந்த கருத்துகள் பரவலான வரவேற்பையும் பெற்றன.

திமுக அரசு ஓராண்டு நிறைவு
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தனது ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. திமுக அரசின் முதலாம் ஆண்டு நிறைவு வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தன.

பா.ரஞ்சித் ட்வீட்
இந்த விமர்சனங்களுடன் பா.ரஞ்சித்தும் தமது ட்விட்டரில் திமுக அரசை கிண்டலடித்தும் காட்டமாக சாடியும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பா.ரஞ்சித் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே? என கேள்வி எழுப்பியுள்ளார் பா.ரஞ்சித்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications