“சென்சார் போர்டில் வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது” - பா.ரஞ்சித்
சென்னை: திரைப்பட தணிக்கை குழுவில் வலதுசாரிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும், அதை மீறித்தான் மக்களுக்கான திரைப்படங்களை எடுப்பதாகவும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற தண்டகாரண்யம் பட விழாவில் பேசிய ரஞ்சித் இவ்வாறு கூறிருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, "முன்பெல்லாம் ஓடிடி நிறுவனங்கள் எல்லா படங்களையும் வாங்கினார்கள். ஆனா இப்போ அவங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கு. ஒரு படத்தின் மையக்கருவை வைத்து, அந்த படத்தை ஓடிடி தளத்திலிருந்து வெளியே எடுக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.

சர்வதேச அளவில் ஒரு காலத்தில் இடதுசாரி இயக்கங்கள் எப்படி பலமாக இருந்ததோ, அதேபோல அதைவிட பலமாக வலதுசாரி இயக்கங்கள் இப்போது இருக்கின்றன. முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தில் ஒரு குறியீடு இடம்பெற்றிருந்தால், அது குறித்து அறிவுசார் துறையை சேர்ந்தவர்கள்தான் ஆராய்வார்கள். குறியீடு மூலம் இயக்குநர் ஏதோ சொல்ல ட்ரை பண்றாருன்னு ஆராய்வாங்க. ஆனா இன்னைக்கு அந்த குறியீடு பற்றி கணக்கெடுப்பதற்கு பலபேர் முன் வந்துட்டாங்க.
குறிப்பாக சென்சார் போர்டு ரொம்ப தீவிரமா அதுல இருக்காங்க. வலதுசாரி ஆதரவு மனப்பான்மை கொண்ட சென்சார் போர்டு உறுப்பினர்கள், நாம் சென்சார் கேட்டு அப்ளை செய்யும்போது அவர்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள். நாம் உள்ளே வரும்போதே நம்மை பார்ப்பது, நம்மிடம் பேசுவது, நம்மை கையாள்வது எல்லாமே பயங்கரமாக இருக்கும்.
அதை மீறி ஒரு திரைப்படத்தை எடுத்து ரிலீஸ் பண்றது, அதை ரிலீஸ் பண்றப்போ, இங்க இருக்குற பார்வையாளர்கள் யாரு? ஓடிடி நிறுவனங்கள் யாரு? வெளியீட்டாளர்கள் யாரு? இவங்கள நம்ம எப்படி இந்த சமாளிப்பது? என இதெல்லாம் மீறி படங்களை ரிலீஸ் பண்ணுவது சவாலானதாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இதை தொடர்ந்து செய்கிறோம். ஏனெனில் இந்த வேலையை நாங்கள் விரும்பி செய்கிறோம்.
இதில் எங்களின் மிகப்பெரிய நம்பிக்கை மக்கள்தான். மக்களை மீறி நாங்கள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. திரும்ப திரும்ப நாங்கள் மக்களிடம்தான் செல்கிறோம். ஓடிடி தோல்வியடையும்போது நாங்கள் மக்களிடம் செல்கிறோம். அப்படி போகும்போது, மக்கள் ஏற்கெனவே கேட்ட, பழக்கப்பட்ட கதையை சொல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு கதையை சொல்லாமல், அவர்கள் சந்திக்கும் நெருக்கடியை பற்றி பேசுகிற படங்களை கொடுக்கிறோம். அப்படியான படங்களுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதன் மூலம், எங்களை கை கொடுத்து உயர்த்துவீர்கள் என்று நம்புகிறோம்" என கூறியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications