காச வாங்கிட்டு பேசும் அற்பர்கள்..வார்த்தையை விட்ட திருமா! உங்கள விட மாட்டோம் அண்ணா..பா.ரஞ்சித் பளீர்
சென்னை: ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்காக வீர வணக்கம் செலுத்துவது, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது விசிக மேடையில் மட்டும் தான் எனவும், பணம் கொடுத்து நடத்தும் எந்த நிகழ்வுகளிலும், பேரணிகளிலும் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்த நிலையில், நாங்கள் காசு வாங்கிட்டு வரவில்லை எனவும், திருமாவளவனை விட்டுத் தர மாட்டேம் என பேசியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ், வில்லன் நடிகர் தீனா, தலித் கூட்டமைப்பினர், சமூக செயல்பாட்டாளர்கள், பல கட்சிகளின் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
இந்நிலையில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த திருமாவளவன், விசிகவினர் எந்த பேரணியிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என கூறியிருந்தார். மேலும், சில அரசியல் களத்திலே கூலியை வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும், யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம்மை வேண்டுமென்றே ஏதோ சொந்த புத்தி இல்லை, சொந்த கால் இல்லை என்பதைப் போல சில அற்பர்கள் அவதூறுகள் பரப்பி இருக்கிறார்கள்.
இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. நம்மை வைத்துக்கொண்டு நம்முடன் நின்று கொண்டு திமுக கூட்டணிக்கு எதிராக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கும்பல் ஏராளம் இருக்கிறார்கள்.: என கூறியிருந்தார். பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த பேரணியைக் குறிவைத்தே திருமாவளவன் இப்படி பேசியதாக விமர்சங்கள் எழுந்தது.
இந்நிலையில் தாங்கள் காசு வாங்கிக் கொண்டு வரவில்லை என பேசியுள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித். நிகழ்ச்சியில் பேசிய அவர்,"இது காசுக்காக கூடிய கூட்டமா? காசு கொடுத்து நம்மை யாரும் கூப்பிட்டார்களா? யாருக்காக கூடினோம் ஆம்ஸ்ட்ராங் அண்ணனுக்காக கூடியிருக்கிறோம்.. காசு கொடுத்து நம்மை யாரும் கூப்பிடவே முடியாது. நாம் எது பேசினாலும் கதையை கட்டி விடுகிறார்கள். இதைச் செய்கிறார்கள்.. அதை செய்கிறார்கள்.. என பேசுகிறார்கள்.
அண்ணனுக்கு எதிராகவே நம்மை திருப்புவது ரொம்ப கவலையாக இருக்கிறது. அண்ணன் திருமாவளவனுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். உங்களுக்கு எதிராக ஒரு நாளும் நாங்கள் இருக்க மாட்டோம்.. உங்களுக்கு எதிராக நாங்கள் ஏன் இருக்க வேண்டும்? எங்களுடைய குரல் நீங்கள்.. உங்களை ஒருபோதும் நாங்கள் விட்டுக் கொடுத்து விட மாட்டோம்" என்றார். இதன் மூலம் திருமாவளவன் பேரணியில் கலந்து கொள்ள கூடாது என்ற விமர்சனத்திற்கு பா.ரஞ்சித் பதிலடி கொடுத்துள்ளதாகவே சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications