இழுபறிக்குப்பின் திருமாவுக்கு கிடைத்த வெற்றி.. இயக்குனர் ரஞ்சித் போட்ட கலங்க வைக்கும் அந்த ட்வீட்!
சென்னை: பெரும் இழுபறிக்கு பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் களம் கண்டார். சக வேட்பாளரான ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் தில்லாக பானை சின்னத்தில் போட்டியிட்டார்.
தமிழகத்தில் பதிவான லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் சிதம்பரம் தொகுதியில் மட்டும் பெரும் இழுபறி நிலவியது.

பெரும் எதிர்பார்ப்பு
ஒவ்வொரு சுற்று முடிவிலும் விசிக வேட்பாளரான திருமாவளவனும், அதிமுக வேட்பாளரான சந்திரசேகரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால் முடிவுக்கு யாருக்கு சாதகமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

விடிய விடிய காத்திருப்பு
நள்ளிரவை தாண்டியும் சிதம்பரம் தொகுதியின் முடிவு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் கட்சித் தொண்டர்கள் சாதகமாக முடிவு வராத என விடிய விடிய காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது.

வெற்றி பெற்றார் திருமா
ஆம்.. அதிகாலை 3 மணியளவில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவர் திருமாவளவன். அதைத்தொடர்ந்த தற்போதுதான் மீண்டும் நாடாளுமன்றம் செல்கிறார்.
|
அவ்வளவு சுலபம் இல்லை
சிதம்பரம் தொகுதியில் பெரும் இழுபறி நீடிக்க இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டார். அந்த ட்விட் பதிவை படிக்கும் போதே மனதில் ஏதோ இனம்புரியாத கவலை சூழ்ந்ததை உணர முடிந்தது, அந்த பதிவு, ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!! இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் பா.ரஞ்சித்.
|
பா ரஞ்சித் பாராட்டு
அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டில் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டதை பாராட்டியிருக்கிறார். மேலும் அண்ணன் திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர் எவர் வெற்றியுடனும் ஒப்பிடமுடியாது ! மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும்! ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது! என கூறியுள்ளார் ரஞ்சித்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications