விஜயகாந்த் கட்டிய கல்யாண மண்டபத்தை இடிக்கலாம்.. ஆனா இதை யாராலும் அழிக்கவே முடியாது: இயக்குநர் பேரரசு
சென்னை: "விஜயகாந்த் கட்டிய கல்யாண மண்டபத்தை இடிக்கலாம். இந்த கோடிக்கணக்கான மக்களின் அன்பு இருக்கிறதே.. அதை யாராலும் அழிக்கவே முடியாது" என இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்.
புரட்சிக் கலைஞர், கேப்டன் என தமிழ்த் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் சுமார் முப்பது ஆண்டு காலம் வெற்றிப் படங்களை வழங்கிய விஜயகாந்த், மக்களுக்கு சேவையாற்ற அரசியலிலும் நுழைந்தார். தேமுதிக எனும் கட்சியை தொடங்கி, முதல் தேர்தலிலேயே எம்.எல்.ஏ ஆகி, 2011 சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

பின்னர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிரமாண்ட நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டார். இதன் காரணமாகவும், விஜயகாந்த்தின் நற்பண்புகள் காரணமாகவும் அவர் திரையுலகினரால் கொண்டாடப்படுகிறார்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த்திற்கு நேற்று புகழஞ்சலி கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திரையுலக பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் பேரரசு, "சாப்பாடு போட்டால் தான் கூட்டம் வரும். கேப்டன் விஜயகாந்த் என்றைக்கோ போட்ட சாப்பாட்டுக்குத்தான் அவரது இறுதி நிகழ்வில் அவ்வளவு கூட்டம் வந்தது. விஜயகாந்த்தை இன்று அடக்கம் செய்துள்ள இடம் சித்தர் பீடம் போல ஆகிவிட்டது. அவர் இறந்து 3 வாரங்கள் ஆன பின்பு இன்றைக்கும் அங்கு கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது. இது எந்த தலைவருக்கும் இல்லாதது.
இந்த நாட்டை பல முறை ஆண்ட முதலமைச்சர்களுக்கு கூட அவர்கள் மறைந்து 3 வாரங்கள் கழிந்த பிறகும் இப்படி கூட்டம் கூடியதில்லை. இன்று கோயம்பேட்டை தாண்டிச் செல்லும்போது அவ்வளவு கூட்டம் இருக்கிறது. இதுதான் அவர் சம்பாதித்தது. அவர் கட்டிய கல்யாண மண்டபத்தை இடிக்கலாம். இந்த கோடிக்கணக்கான மக்களின் அன்பு இருக்கிறதே.. அதை யாராலும் அழிக்கவே முடியாது.
என்னைப் பொறுத்தவரை கேப்டனின் மரணத்தை இழப்பு என்று சொல்ல முடியாது. அது நம் நாட்டின் இருப்பு. எல்லோருடைய மனதிலும் அவர் இருக்கிறார். ஒரு நல்ல நல்ல தலைவனை இழந்துவிட்டோம். மக்களை உண்மையிலேயே நேசித்த தலைவனை இழந்துவிட்டோம். கேப்டன் பிரபாகரன் படம் தெலுங்கிலும் பயங்கர ஹிட். அதைத்தொடர்ந்து தெலுங்கில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், விஜயகாந்த் அதனை ஏற்கவில்லை. கேப்டன் ஒருவர் தான் நடித்த முதல் படம் முதல் கடைசி படம் வரைக்கும் தமிழ்ப் படம். அதுதான் அவரது தமிழ்ப் பற்று." எனப் பேசினார் பேரரசு.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications