இயக்குநர் ஆர்.கே.செல்வமணி-நடிகை ரோஜாவின் மகள் அன்சு மாலிகாவுக்கு கிடைத்த உயரிய விருது
சென்னை: பிரபல இயக்குனர் ஆர்.கே.செல்வமணி-நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்சு மாலிகா அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு பெண்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையம், 2025-ம் கல்வியாண்டுக்கான ''மவுரீன் பிக்கர்ஸ்'' என்ற தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ரோஜாவின் மகளுக்கு வழங்கப்பட்டது ஏன்? அந்த விருது எதற்காக வழங்கப்படுகிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கிவர் ஆர்.கே.செல்வமணி. அதேபோல் செம்பருத்தி, சூரியன், உழைப்பாளி,வீரா, மக்களாட்சி, ஆயுத பூஜை உள்பட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரோஜா. நடிகை ரோஜா ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திரைத்துறையில் புகழ் பெற்ற நடிகையாக இருந்த ரோஜா, ஆந்திராவில் அரசியலில் நுழைந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏ ஆனார். அப்படியே அமைச்சராகவும் இருந்தவர் ஆவார். ஆர்.கே.செல்வமணி-நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்சு மாலிகா அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
இந்த நிலையில் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையம் என்ற அமைப்பு 2025-ம் கல்வியாண்டுக்கான ''மவுரீன் பிக்கர்ஸ்'' என்ற தலைமைத்துவ விருதை அன்சு மாலிகாவிற்கு அறிவித்துள்ளது. இந்த விருது கல்வி மற்றும் தொழில் முறை சிறப்பின் சேவையில் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்துவதில் நீண்டகால அர்ப்பணிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படுகிறதாம். அந்த வகையில் மாணவி அன்சு மாலிகாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாக தெலுங்கு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள் அணுகக்கூடிய தொழில்நுட்ப கல்வி வாய்ப்புகளை உருவாக்குவதில் மாணவி அன்சு மாலிகாவின் பணி மிக முக்கியமானதாக அமைந்திருந்தாகவும், மேலும் அவருடைய தலைமை, தொலைநோக்கு, உலகளாவிய தாக்கம், தொழில்நுட்ப சமத்துவம் வாழ்க்கையை மாற்றும் மற்றும் அனைவருக்கும் கல்வி, தொழில்முறை வாய்ப்புகளுக்கான கதவுகளை திறக்கும் என்ற நம்பிக்கையும் இந்த விருதை அவர் பெற காரணமாக அமைந்துள்ளதாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications